Total Pageviews

Sunday, December 26, 2010

சிகரட் ஒரு வித்தியாசமான பார்வை


submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/blog-post.html"

Monday, December 20, 2010

Touching Scene Ever (Indian Film) with tamil subtitles

.(Any Languagers are can understand)(English, Arabic, telugu, sinhala, any language)
u eyes will cry without ur permission after watch this scene
உங்களை அறியாமலேயே நீங்கள் அழுதுவிடுவீர்கள்
Amazing Scene

Heart Touching Scene From Indian Film (Swedish)
மனதை நெகிழ வைக்கும் அற்புதமான ஒரு வீடியோ காட்சி
உங்கள் குழந்தைகளுக்கும் காட்டுங்கள்.....
இது குழந்ததைகளை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது.
அற்புதமான காட்சி அமைப்பு..... Sharukh khan starring..... scene from amazing film swedish
Apple iBook G3 500Mhz 128MB 10Gb CDROM 12.1'' OS X OFFICE 2004 Plus Upgraded Models Available


Apple iBook G3 500Mhz 128MB 10Gb CDROM 12.1'' OS X OFFICE 2004 Plus Upgraded Models Available  submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/touching-scene-ever-indian-film-with.html"

சின்ன குத்பா.... Small Kuthba (Small Advice)


சின்னதொரு குத்பா?.......
நம்மில் சிலருக்கு வெள்ளிக் கிழமையென்றாலே ஒரு வகையான தூக்கம் தான் காரணம் என்ன? submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/small-kuthba-small-advice.html"

Tuesday, December 14, 2010

சிந்திக்க தான் குர்ஆன்......

நீங்களும் ஒரு நாள் இப்படி மாட்டிக் கொண்டு தவிக்க நேரிடலாம்.....
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%86%E0%AE%A9.html"

Tuesday, December 7, 2010

பாருக்குள்ளே ஒரு நாடு (Nice poem from Kaviko) Amazing

அவர்களைச் சிறையில்
சந்தித்தேன்....

 

“என்ன குற்றம் செய்தீர்கள்”
என்று கேட்டேன்.

ஒவ்வொருவராகச்
சொன்னார்கள்..



எங்கள் வீட்டில்
திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வருமானத்தைக்
கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப்
பட்டாதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.

“நான் கரி மூட்டை
தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த
ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம்
வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வயலுக்கு வரப்பு
எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று
பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”



“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை
அவருடைய கடமையைச்
செய்ய விடாமல்
தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”

“அலிபாபாவும் நாற்பது
திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற
உறுப்பினர்களை
அவதூறு செய்ததாக
அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”

“வறுமைக் கோட்டை
அழிப்போம்” என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை
அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப்
போட்டுவிட்டார்கள்”

“ஊழல் பேர்வழிகளை
நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன்,
“கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.

“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன்.
நாட்டின்
ஸ்திரத் தன்மையைக்
குலைத்ததாகக் கொண்டு
வந்து விட்டார்கள்”


“சுதந்திர தின விழாவில்
‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள்.
நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில்
அடைத்து விட்டார்கள்”

“அக்கிரமத்தை எதிர்த்து
ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்”
என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன்.
“பயங்கரவாதி” என்று
என்னைப் பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை
எதுவும் இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/nice-poem-from-kaviko-amazing.html"

Friday, December 3, 2010

இஸ்லாமிய இசை புரட்சி நாயகன் (Maher Zain)

இளசுகளின் இதயத்துடிப்பு

சினிமா பாடல் கேட்க வேண்டாம் அது ஹராம் அது சீரழிவை கொண்டு வருகிறது என்றெல்லாம் நாம் நிரைய பயான் கேட்டிருக்கிறோம். அடுத்தவர்களுக்கு பயான்பன்னியுமிருக்கிறோம். உண்மையில் நாம் பயான் செய்வதுடன் மட்டும் எங்களை நிறுத்திக் கொண்டுவிட்டோம். அந்த சினிமாப் பாடல்களுக்கு பகரமாக இஸ்லாமிய படைப்புக்களை உருவாக்குவதில் எந்த முயற்சியும் யாரும் எடுத்தாக தெரியவில்லை.

 அப்படியான சூழ்நிலையில் எங்களுக்கு சினிமா பாடல்களுக்கு பகரமாக அல்ல அதைவிட சிறந்த படைப்புக்களை தந்து கொண்டிருக்கிறார் இந்த படைப்பாளன். இவரின் பாடல்களை நீங்கள் உங்கள் வீடுகளில் ஒலிக்கவிடுங்கள். நிச்சயம் உங்கள் பிள்ளைகள் சினிமாப் பாடல்களை பாடமாட்டார்கள் அந்த தூஷனப்பாடல்களை பாடமாட்டார்கள். இவரின் இந்த இஸ்லாமிய பாடல்களையே பாடுவார்கள். ஏனெனில் இந்தப் பாடல்கள் ஆங்கிலத்தில் அமைந்தாலும் இதில் வரும் அல்லாஹ் ஸூப்ஹானல்லாஹ் இன்ஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் பாரகல்லாஹ் ரஸூலின் மீது ஸலாவத்து சொல்லல் போன்றவை மிகவும் அடிக்கடி உச்சரிக்க முடியுமான சிறுவர்களையும் கவரக்கூடிய மெட்டில் அமைத்துள்ளார். மற்றும் இவரின் பாடல்கள் சோர்ந்து போயிருக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் நம்பிக்கையையும் ஈமானையும் அதிகரிப்பதாகவே உள்ளது. சோர்ந்து போன உள்ளங்களுக்கு புத்துயிரழிக்கும் ஒரு பாடலாகவே கீழே உள்ள இன்ஷா அல்லாஹ் பாடல் மிகவும் உணர்வுபூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பாடலி;ன் தமிழ் மொழிபெயர்ப்யையும் நீங்கள் பாடலுடனேயே சேர்த்து பார்க்கலாம்.இது மிகவும அற்புதமான பாடல் கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமும் பார்க்க வேண்டிய பாடல்....


1. நம்பிக்கையீனங்களையும் தோல்விகளையும் விரக்தியையும் கேட்கும் நாங்கள் பாவங்களில் மூழ்கி அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துள்ள நாங்கள் இந்த பாடல்களை கேட்பதின் மூலம் புது நம்பிக்கையை பெறலாம் புது புத்துயுரை பெறலாம்.... அல்லாஹ் மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். கோஞ்சம் கேட்டுபாருங்க நான் சொல்வது உண்மையா என்று....






2. எங்கள் உயிரிலும் மேலான நபியவர்களின் சில வாழக்கை சம்பவங்களை ஞாபமூட்டுகிறது இந்து அழகிய இனிமையான பாடல்......
அந்த இருள் சூழ்ந்த ஜாஹிலிய்யத்துக்கு ஒளியூட்டிவர் எங்கள் நபி... அது போல் இன்றைய ஜாஹிலிய்யத்துக்கு ஒளியூட்டக் கூடியதும் நம் நபியின் அழகிய பண்புகளும் வழிகாட்டால்களும் தான் அழகிய பாடல் கட்டாயம் பார்த்து ரசியுங்கள்.




3. பலஸ்தீன் விடுதலை சம்பந்தமாக பல பாடல்களை பார்த்திருப்பீhகள். ஆனால் இந்த பாடல் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. ஒரு கார்டுனை போல் சிறுவர் பெரியவர்கள் எல்லோரையும் கவருவது போல் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் வரிகள் பலஸ்தீன் விடுதலையடைந்துவிடும் என்று உறுதியாக சொல்வதுடன் அதை எங்கள் மனதில் உறுதியாக பதியவும் வைக்கிறது. பலஸ்டைன் வில் பீ ப்ரீ...........
PALASTINE WILL BE FREE




பார்த்தீர்களா எவ்வளவு அருமையான பாடல்கள் இதை கேட்பவர்கள் இதை தான் முனுமுனுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமி;ல்லை.
இந்த அருமையான படைப்புக்களுக்கு சொந்தகாரர் யார் என்று பார்த்தேயோமானால் அவர் பெயர் தான் மாஹிர் ஸெய்ன் இஸ்லாமிய இசை உலகின் முடிசூடா மன்னன். இசையால் கவரடப்படாதவர் யாருமில்லையென்றே சொல்லாம் அந்த வகையில் இசையால் கவரப்பட்ட மாஹிர் ஸெய்ன் தனது




10ஆவது வயதிலேயே இசைக் கருவியை கையிலெடுக்கிறார். அன்று தொடக்கம் மாஹிரின் வாழ்வில் இசை ஒன்றரக் கலந்தது என்று தான் கூறலாம். அவருக்கு இசையென்றால் அவ்வளவு ஆர்வம்.
மாஹிர் ஸெய்ன் 8 வயதாக இருக்கும் போதே அவரது குடும்பம் ஸ்வீடனை நோக்கி புலம்பெயர்கின்றனர். தனது கல்வி நடவடிக்கைகளை அங்கேயே தொடர்ந்து பின் பல்கலைக்கழகத்தில் Aeronautical Engineering (விமானம் சம்பந்தமான) படிப்பை முடிக்கிறார். அவரது வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டு போனாலும் சிறுவயதிலிருந்தே அவர் இசை மேல் வைத்த  ஆர்வம் அவரிடமிருந்து குறையவேயில்லை.
மாஹிர் எத்தனையோ இரவுபகல்களை பாடல் தொகுப்பதிலும் இசையமைப்பதிலும் நண்பர்களுடன் பாடசாலையில் கழித்திருக்கிறார்.
இசையமைப்பாளராக மாஹிர் ஸெய்ன் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது Red One என்ற பிரபலமான இசை கலைஞருக்கு அறிமுகமாகிறார். Red One சுவீடனில் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளர். அவருடன் சிறிது காலம் பணியாற்றிய மாஹிர் நிவ்யோக் பயணமாகிறார். அங்கு NY என்ற நிறுவனத்துடன் சிறிது காலம் பணிபுரிகிறார். இக்காலப்பிரிவுகளில் மிகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் பாடகர்களுடன் இணைந்து பணி புரியும். வாய்ப்பு இவருக்கு கிட்டியது.
அவரது முதல் அல்பம்Thank you allah” என்ற புகழ்பெற்ற இசை அல்பம் வெளியிடப்படுகிறது. இந்த அல்பம் மாஹிரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இவரின் இந்த அல்பம் 'அமேசன்'“Amazon” ' உலக இசைவரியில் முதலாமிடத்தையும் R & B Chart இல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துக் கொண்டது.

ஜனவரி 2010 இல் எகப்தில் மிகப் பெரும் வானொலி நிறுவனமான Nujoom Fm ஏற்பாடு செய்த இசைப் போட்டியில் 2009 க்கான சிறந்த பாடலாக இவரின் 'யா நபி ஸலாம் அலைக்க' என்ற பாடல் தெரிவாகியது. இப்போட்டியில் இஸ்லாமிய உலகின் முடி சூட மன்னர்களான மொஹமட் முனீர் ஸமீ யூஸூப் (Sami Yusuf) போன்றோரும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் இப்பொழுது இவரின் இசை போராட்டத்தை பல நாடுகளில் நடத்தி வருகிறார். Algeria, Australia, Belgium, Canada, Egypt, England, France, Holland, Sweden, USA,போன்ற நாடுகளில் நடத்தி வருகிறார்.

இவர் எதிர்காலத்தில் இஸ்லாமிய இசைத் துறையில் பெரிய புரட்சியொன்றை செய்வார் என்று எமக்கு உறுதியாக நம்பலாம்.... இன்ஷh அல்லாஹ்.


யா அல்லாஹ் இவரின் செயல்களை நீ அங்கீகரித்து இவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்றும் சுவர்க்த்தை வழங்குவாயாக.
ஏன் யோசிக்கிறீங்க இ;ப்போதே இவரின் பாடல்களை எடுத்து உங்கள் குழந்தைகளின் காதில் விழும் வண்ணம் ஒலிக்கவிட்டு பாருங்க இனிமேல் அவர்கள் சினிமா பாடல் பாடவே மாட்டாங்க.....



இவரின் இந்த இசைத்தொகுப்பு வேண்டுமானவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.......





                              A.R.M. I N A S


submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/maher-zain.html"