Total Pageviews

Friday, October 29, 2010

கலிமா சொன்ன பிர்அவ்ன்

அண்மையில் ஒரு அருமையான எல்லோரும் அறிந்த ஒரு சம்பவத்தை வித்தியாசமான கோணத்தில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அது தான்.


கொடுங்ககோலன் பிர்அவ்ன அல்லாஹ்வை எதிர்த்து தான் அல்லாஹ் என்று கூறி கடைசியில் அல்லாஹ்விக் தண்டனைக்கு உட்பட்டுக் கொண்டிருந்தான். அவன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தான் அவன் கடலில் மூழ்கப் போகிறான் அது அவனின் இறுதி நேரம். அக் கொடுங்கோலன் அந்த இறுதி நேரத்தில் தன் வாயால் இவ்வாறு மொழிகிறான். மூஸாவின் றப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் முதலாம் முறை சொல்கிறான். ஆப்படியே அவன் இரண்டாம் முறையும் சொல்ல அவன் வாயை திறக்கும் போது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் அலை அவர்கள் அவனின் வாயில் மண்ணை போடுகிறார் அவன் மறுபடியும் அவ்வாறு சொல்லாமலிருக்க. பிர்அவ்ன் அப்படியே கடலில் மூழ்கி செத்து மடிகிறான்.

மேற் சொன்ன சம்பவத்தை வைத்து ஒரு ஹதீஸ் இப்படி கூறுகிறது.
ஜிப்ரீல் அலை அவர்கள் அவனை 2ம் முறை சொல்லவிடாமல் அவனின் வாயில் மண்ணை போடக் காரணம். அந்த கொடுங்கோலனின் வார்த்தைகளால் அல்லாஹ் அவன் மீது அன்பு கொண்டு அவனை மன்னித்துவிடுவானோ என நினைத்ததால் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.
உண்மையில் இதன் மூலம் நாம் உணர வேண்டிய விடயம் ஜிப்ரீல் அலை அவர்கள் எங்களைவிட அல்லாஹ்வை பற்றி மிக அறிந்தவர் இன்னொரு வார்த்தையில் கூறினார்கள் எங்களைவிட அதிகம் அல்லாஹ்வை புரிந்து கொண்டவர். இப்படிப்பட்ட கொடுங்கோலனை அல்லாஹ் மன்னித்துவிடுவானோ என்று எண்ணுமளவுக்கு அல்லாஹ்வின் அன்பு விசாலமானது என்று ஜிப்ரீல் அலை அவர்கள் தெரிந்து வைத்திருக்கறார்.அது தான் உண்மையும் அல்லாஹ்வின் அன்பு விசாலமானது.

பாருங்கள் நாங்கள் யாரும் பிர்அவ்னை விட கொடியவர்கள் இ;ல்லை அல்லாஹ் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளவிட முடியாது. அப்படியிருக்கும் போது நாம் அல்லாஹ்வுக்கு அதற்கு என்ன செய்கிறோம் குறைந்தது தொழுகையை கூட நாங்கள் ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை. தொழுகையை அல்லாஹ் பரிசாகத்தான் தந்தான் அந்த பரிசையே நாம் ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்காமல் உதறி தள்ளுகிறோம். அதுவும் அவன் எம் மீது கோபம் கொள்ளாமல் எங்களுக்கு அருள் புரிந்து வாழவிட்டிருக்கிறான். உலகில் நடக்கும் பாவங்களுக்கு அல்லாஹ் உடனுக்குடனே தண்டனை கொடுத்தால் நிச்சயம் உலகில் யாரும் வாழமாட்டார்கள்.

அல்லாஹ் எங்களுக்கு திருந்த அதிகமான சந்தர்ப்பங்களை தந்திருக்கிறான். அவன் குர்ஆனில் கூட சுவர்க்கத்தை பற்றியே அதிகம் கூறியுள்ளான் காரணம் அவனின் விருப்பமும் எல்லோரும் சுவர்க்கம் போக வேண்டும் என்பது தான். அதற்கு தான் அவன் இந்த உலகில் எங்களுக்கு பல சந்தர்ப்பங்களை தருகிறான். ஆனால் நாமோ அதை கண்டு கொள்வதுமில்லை.

அன்பான அல்லாஹ் கூலி கொடுக்கும் போது கூட தீமைக்கு தீமையின் அளவுக்கு ஏற்பவே தண்டனை கொடுப்பான் ஆனால் நன்மைக்கு அந்த நன்மையைவிட பல மடங்கு கொடுக்கிறான். காரணம் அல்லாஹ் எங்களிடம் வைத்துள்ள அளவற்ற அன்பு.

புதிதாக ஒரு திரைப்படம் வருமானால் முந்திக் கொண்டு பல மணி நேரம் காத்து நின்று காயப்பட்டுக் கொண்டு சண்டை பிடித்துக் கொண்டு சில நேரங்களில் அந்த இடங்களில் ஷஹீத்களாக கூட ஆகுறார்கள் (அதற்காக வேண்டி உயிரை கூட விடுகிறார்கள்). உண்மையில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதில் இருக்கப் போவது சில கூத்தாடிகள் வருவார்கள் அரைநிர்வாணத்துடன் ஆட்டம் போட்டு திரைப்படம் முடிந்துவிடும் அத பார்த்த உள்ளத்தில் கொஞ்சம் சந்தோசம் மாதிரி இருக்கும்.அந்த விபச்சார கூத்தாடிகளுக்காக வேண்டு உயிரை விட்றீங்க அவன் உங்களுக்கு என்ன செய்தான்.

சுவாசிக்க மூக்கை தந்தானா இரு கைகளை தந்தானா சாப்பிட சாப்பாட்டை தந்தானா குறைந்தது உங்க வீட்டுக்கு வந்து ஒரு தேனீர் கோப்பை சரி வந்து குடித்துவிட்டு போனானா கொஞ்சம் யோசியுங்கள் அவன் உங்களுக்கு என்ன செய்தான் ஏன் நீங்கள் அந்த விபச்சார கூத்தாடிகளுக்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு அவன் மீது அன்பு வைக்கிறீர்கள்.


மறுபுறம் பாருங்கள் அன்பான அல்லாஹ் உங்களுக்கு தந்தது என்ன என்று கேட்பதைவிட அவன் உங்களுக்கு தராதது என்ன என்று தான் கேட்க வேண்டும். அல்லாஹ் சொல்கிறான் உங்களுக்கு அருகாமையில் தான் நான் இருக்கிறேன் நீங்கள் கேட்பவையெல்லாம் எனக்கு கேட்கும் தூரத்தில் தான் நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான்

இந்த அற்ப விடயங்களுக்காக வேண்டி அன்பான அல்லாஹ் தந்த நான்கு ரகஆத் பரிசை கூட உதறி தள்ளுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றுமே செய்யாத அந்த உருப்படியற்ற சினிமாவுக்கு 5 மணித்தியாலங்கள் செலவிடுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு வாழ்க்கையையே தந்த அந்த அன்பான அல்லாஹ்வுக்கா வேண்டி 5 நிமிடம் கூட செலவிடுவதில்லை. அப்படியிருந்தும் அல்லாஹ் உங்களை தண்டிக்காமல் விட்டிருக்கிறான் அதுவும் அவனின் விசாலமான அன்பின் காரணமாகத்தான்.

இந்த சந்தர்ப்பம் எல்லாம் நம் உயிர் தொண்டை குழியை அடையும் வரைதான் அதன் பிறகு நாங்கள் என்ன செய்த போதும் பயன் இல்லை.அந்த நேரத்தில் யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது.  ஆகவே நாங்கள் எம் உயிர் தொண்டை குழியை அடைய முன்னால் அவனின் அன்பை புரிந்து கொண்டு அவன் சொற்படி நடப்போம்.


எவன் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி). (திர்மிதி, ஸஹீஹூல் ஜாமிஃ).
submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_29.html"

Thursday, October 28, 2010

ஹாஜிகள் எல்லாரும் நரகம் போவங்களா?




மறுமை நாளை பற்றி சில விடயங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மறுமையில் பெரிய மனிதர்கள் அதிகமானோர் நரகத்துக்கு செல்வர்.
அப்பாவி மக்கள் அதிகமானோர் சுவர்க்கம் செல்வர்.
அதிலே கூறப்பட்டது
உலகிலே பெரியவர்களாக பணக்காரர்களாக பெரிய பதவி வகித்தவர்களாக பெரிய ஆலிம்களாக கருதப்பட்டோரே அதிகம் நரகத்திலிப்பார்கள் என்று.
ஆனால் வாழக்கையில் கீழ் மட்டத்தில் மிகவும் சாதாரணமாக ஏழையாக ஒரு சிரிய வேலையை செய்து கொள்ளவும் அங்கேயும் இங்கேயும் அலைந்து இன்னல்பட்டு சீரழிந்து அந்த அதிகாரியிடம் ஏச்சுக் கேட்டு இந்த அதிகாரியிடமும் ஏச்சு  கேட்டு இப்படி வழமையான வாழ்க்கையை மிச்சம் சிரமத்தோடு கழிக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இலகுவாக சுவர்க்கத்துக்கு செல்வர்.
காரணம்.....
இவ்வுலகில் பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு  பணக்காரர்களுக்கு பெரிய அறிவாளிகளுக்கு அதிகமாக வரும் சோதனை தான். இவர்களின் அந்தஸ்து அதிகரிக்க அதிகரிக்க இவர்களுடன் சேர்ந்து

பெருமை

கர்வம்

அகங்காரம்

நான் தான் உலகில் சிறந்தவன்
என்னை விட்டால் வேறு யாருமில்லை
நான் தான் உலகின் அதி சிறந்த பேச்சாளன் புத்திசாலி
என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
அது மட்டுமல்ல அவர்கள் உலகில் பெரிய பொறுப்புக்களை சுமந்திருப்பர் ஆனால் அதை அவர் ஒழுங்கான முறையில் நிறைவேற்றாமல் இருந்திருப்பார்.
மறுமை நாளில் பலர் பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார்களாம்.
அது ஏன் என்றால் மறுமை நாளில் அவர்கள் தெரிந்து கொள்வார்கள் அவர்கள் நரகவாதியா சுவர்க்வாதியா என்பதனை. அந்த சந்தர்ப்பத்தில் இந்த உலகில் உயர்ந்தவர்களாக எண்ணத்தால் கருதிக் கொண்டவர்கள் நரகத்துக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பார்கள்
அந்த நரகத்துக்கு நிச்சயிக்கப்பட்டவர்கள் இந்த உலகில் இழிவாக கருதியவர்கள்
( தனது வீட்டு வேலைக்காரன் மற்றும் தனது அலுவலை செய்து கொள்ள வந்து தன் அதிகாரத்தால் இழிவு படுத்தப்பட்டவர்கள் அரச அலுவலகங்களில் இவற்றை காணலாம் சாதாரண மக்களை அரச அதிகாரிகள் பொருட்படுத்தவே மாட்டார்கள் அதிகமான ஆலிம்மார்களும் இப்படித்தான்).

தன்னைவிட கீழ் உள்ளவர்கள் சிரியவர்கள் சுவர்க்கம் செல்லும் போது பெரியவர்கள் ஹாஜியார்மார்கள் பெரிய பேச்சாளர்கள் ஆலிம்கள் அரச அதிகாரிகள் டாக்டர்கள் என்ஜினியர்கள் அந்த உலகில் கீழ் நிலையிலிருந்தர்களை பார்த்து வெட்கத்தால் தலை குனிந்து நிற்பர். தலையை உயர்த்தி பார்த்தால் அவர்களுக்கு அவமானமாகிப் போய்விடும்.
இந்த உலகில் தாழந்து இழிவடைந்து அப்பாவியாக இருந்த மக்களுக்கு பொதுவாக இந்த பிரச்சினை வராது ஏனெனில் அவர்கள் இந்த உலகத்தில் இருந்தது அந்த நிலையில் தான்.
ஆனால் உயர்ந்த பெரிய பதவிவகித்தவர்கள் தன் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றாத காரணத்தாலும் பெருமையடித்து சிரிய அந்தஸ்துள்ளவர்களை இழிவாக கருதியதன் காரணத்தாலும் பிர்அவ்னின் தலைமையில் தலைகுனிந்து அவமானப்பட்டு இழிவடைந்திருப்பார்கள்.
இதன் குறிக்கோள் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்கள் நரகவாதிகள் கெட்டவர்கள் என்று பத்வா கொடுப்பதல்ல. இந்த தீனை நிலைநாட்டுவதில் உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் உயர்ந்த அந்தஸ்து பதவி வகிப்பவர் ஆலிம்களுக்கு பொறுப்புக்கள் அதிகம் அது ஒரு அமானிதம் என்றே கருத வேண்டும். சாதாரண கீழ் நிலையிலுள்ளவனை பொருத்தவரையில் அவன் இவ்வாறான உயர்ந்த பொறுப்புக்களை சுமக்காததன் காரணமாக தப்பித்துக் கொள்கிறான்.


அது மட்டுமல்ல இன்றைய பணக்காரர்களின் பெரிய பொறுப்பு வறுமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது அது ஒரு அவர்களுக்கான அமானிதம் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் சமூகப் பொறுப்பை நிறைவேற்றாமல் தன் குடுப்பத்தோடு ஆயிரமாயிரம் ஹஜ் செய்தாலும் பயன் இருக்குமா? அல்லாஹ் அவர்களுக்கு வாரி வாரி பணத்தை கொடுத்தது நினைத்து நினைத்து கார் வாங்கவும் குடும்பத்துடன் போய் ஆயிரம் ஹஜ் உம்ரா செய்து நாங்கள் இவ்வளவு ஹஜ் செய்தோம் என்று பீற்றி கொள்வதற்கு அல்ல........

“நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவை விளகிக்கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக ( அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.”( சூரத்துல் அஹ்ஷாப்: 72) submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_28.html"

Friday, October 22, 2010

ZUHAIR LAWYER short film



UMMA SOLLUM MAHAN NEE SCIENCE SEI
WAPPA SOLLUM COMMERCE SEI
SCHOOL SOLLUM MATHS
SEI MAHAN ENNATHA SEIYA

மணமகளுக்கு சம்மதமில்லாத திருமணம் போல் தான் இதுவும். அங்கு மணமகள் பாதிக்கப்படுவாள் இங்கு மாணவன் பாதிக்கப்படுகிறான். இந்த விடயம் ஒவ்வொரு வருடமும் நம் பாடசாலைகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இங்கு சொல்ல வருவது இதுவும் ஒரு பிரச்சினைதான் இது மட்டும் தான் பிரச்சினை என்று சொல்ல வரவில்லை. நல்லது கெட்டது என்ன கருத்தாக இருந்தாலும் இங்கே பதியுங்கள் . அது ஒரு சொல்லாக இருந்தாலும் சரி. short film
on Yotube
http://www.youtube.com/watch?v=0ndrzEPivYo submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/zuhair-lawyer-short-film.html"

Thursday, October 21, 2010

ஒற்றுமையின் பலம் power of unity NEMO




amazing scene about team work from film NEMO..
ஒற்றுமையின் பலத்தை எடுத்துக் காட்டும் ஒரு அற்புதமான வீடியோ நேமோ படத்திலிருந்து தமிழில் for children
same video on youtube
http://www.youtube.com/watch?v=wM7ZnaTSr5M submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/power-of-unity-nemo.html"

Wednesday, October 20, 2010

ஹஜ்ஜோ ஹஜ்ஜி short film



namma hajiarmar ellam ipidiya?

பக்கத்தில் இருக்கும் சகோதரனின் கஷ்டத்தை உணராத நம்ம ஹாஜியார் மார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல்லாயிரம் மைல் தொலைவில் வாழ்நத
இப்றாஹீம் நபியின் கஷ்டத்தையும் தியாகத்தையும் எப்படி உணர்வார்கள்.
(ஹஜ்ஜிக்கு போய்) is it real hajj.........
to watch on youtube click link
http://www.youtube.com/watch?v=OQ1J1xtZrtA submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/short-film_4329.html"

ஸகாத்துக்கு இன்னொரு பெயர் பிச்சையா?




தற்கால நம் சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினை பெரிதாக உருவடுதள்ளது. அதற்கு இஸ்லாம் வைக்கும ஒரு சிறந்த தீர்வு தான் ஸகாத் ஆனால் இந்த ஸகாத் எந்த ஒரு திட்டமிடலுமின்றி ஏனோ தானோ என்று கொடுக்கப்படுவதால். அதன் பயனை சமூகம் அடைந்து கொள்ளவில்லை. எல்லா விடயங்களிலும் சண்டை பிடிக்கும் விவாதம் செய்யும் நம் சமூகம் ஏன் ஸகாத்தை ஒழுங்காக கொடுக்க வேண்டும் என்று சண்டையிடுதில்லை. ஆபுபக்கர் (றழி) காலத்தில் ஒரே சமயத்தில் பொய் நபி ஸகாத் கொடுக்காதவர் இதில் முதலில் கவனம் செலுத்தியது எதற்கு? சிந்தியுங்கள்.
watch same video on youtube this link
http://www.youtube.com/watch?v=63WwljYBTEE submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_1654.html"

ரவூப் ஹாஜியின் உம்ரா short film




உம்ரா ஒரு ஸூன்னதான் வணக்கம் அதாவது நபியின் வழி முறை.
ஒருவன் வாழ வழியில்லாமல் வாழப் போராடிக் கொண்டிருக்கிறான்
வறுமையின் காரணமாக மார்கத்தையே விடத் தாயராகிறான்.
இதை நபியவர்கள் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
நபியின் கையில் பெரும் தொகை பணமும் இ......ருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
நம் நபியவர்கள்
உம்ராக்கு போவரா இல்லை
அந்த வாழ வழியில்லாதவனுக்கு உதவி செய்வானா? எது நபியின் வழியாக இருக்கும்.

you can watch same video on youtube from this link
http://www.youtube.com/watch?v=RkzqpyiwuEg submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/short-film_20.html"

இது உங்கள் மரணவேலை?






இது உங்கள் செயலிலும் சிந்தனையிலும் மாற்றத்தை கொண்டு வரக் கூடியது கட்டாயம் பாருங்கள். இது உங்களில் பெரிய மாற்றத்தை உண்டு பண்னும்.
this video may be change ur life. islamic inspirational video . with tamil subtitles. enjoy
same video on youtube watch this link submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_7679.html"

வறுமையின் கோரம்.



PARTHAL ALUHAI WARUM..........

பாருங்கள் இந்த ஆவணப் படத்தை நிச்சயம் உங்கள் கண்களில் கண்ணீர் வடியும். இவர்களும் நாம் வாழும் அதே பூமியில் தான் வாழ்கின்றனர். இறைவன் நம் எல்லோருக்கும் செய்திருக்கும் அருளை சிந்தித்துக அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
to watch on Youtube click the link
http://www.youtube.com/watch?v=Md04JaITIFI submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_20.html"

Tuesday, October 19, 2010

செம்ம கேள்வி (creative question by student)



PODIYANMARHALE SIR TA KELWI KETTA IPPIDI KELWI KELUNGA? FUNNY
செம்ம கேள்வி (creative question by student) 3idiots award wining film tamil subtitles.
watch it its creative
same video on Youtuve watch its this link
http://www.youtube.com/watch?v=d9hDaRDRONk submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/creative-question-by-student.html"

Monday, October 18, 2010

தந்தையின் அன்பு dads love short film with tamil subtitles



ammawin anbai kandipinga.......
appawing anba kandika matinga
parunga appawing anba its amzaing
தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிபூர்வமான ஒரு குறுந்திரைப்படம். அழகான் கதை
same video on youtube click this link
http://www.youtube.com/watch?v=HT5RZNQoopA submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/dads-love-short-film-with-tamil.html"

Sunday, October 17, 2010

changing 5 minits உங்களை இது மாற்றும்



muyatchi udaiyor ihalchi adaiyara palamoli kelwi patirupinga......
videola pathiruka mattinga....... kattayam parunga

உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் 5 நிமிடங்கள் பயிற்சியே வெற்றியின் ரகசியம். அதற்கு சாட்சி சொல்லும் இவர்களின் சாதனைகள்.
same video youtube clikc this link
http://www.youtube.com/watch?v=XPOtyjnTz6w submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/changing-5-minits.html"

செம்ம ஆப்பு



fulla  parunga wayiru kulunga kulunga siripinga.................
சொல்லின் அர்ததம் விளங்காமல் மனப்பாடம் செய்வோருக்கு ஒரு சிறந்த படிப்பினை. சிரிக்க சிந்திக்க....... பாருங்கள்.
you watch same video in YOUTUBE from this link
http://www.youtube.com/watch?v=boS_iN-nGrI submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_124.html"

சீதனக் கொலை short film




எல்லா சமூகமும் எல்லா மதமும் ஒன்று பட்டு வெறுக்கின்ற இந்த தீமையை ஒழிக்க ஒன்றுபடுவோம். கொலையை விட கொடுரமான இந்த பாவச் செயலுக்கு உங்கள் எதிர்பைபை எந்த வகையிலாவது வெளிப்படுத்துங்கள். மௌனமாக அனுமதிக்காமல். இந்த ஈனச் செயலை இல்லாமல் செய்ய இப்போதே இதற்கெதிராக போர்க் கொடி தூக்குங்கள். short film against dowry system
you can this same video in YOU TUBE FROM THIS LINK

submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/short-film.html"

உங்க ஸேரும் இப்படியா?




இன்று Teaching Method il  உள்ள குறைபாடுகளையும் Syllabus  உள்ள குறைபாடுகளையும் தெளிவாக எடுத்துக் காட்டும் ஒரு சிரிய சிரிக்கவும் சிந்திக்க வைக்கும் ஒரு சிரிய வீடியோ தமிழ் உப தலைப்புக்களுடன். கட்டாயம் பாருங்க.
you can watch same video in you tube from this link.
http://www.youtube.com/watch?v=CvmFTjVYIZQ submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_17.html"

Saturday, October 16, 2010

என்னால் முடியும் I CAN do motivational video

வித்தியாசமான ஒரு மனதை கவர்ந்த மோடிவேசனல் வீடியோ கட்டாயம் பாருங்க இது உங்கள் சிந்தனையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டுவரும். also dont forget to make a comments (+ positive or - negative) motivational video submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/i-can-do-motivational-video.html"

மகத்தான வெற்றி the real victory short film



amazing car story with Tamil subtitles short film by A.R.M. INAS suitable for children s....
விட்டுக்கொடுப்பில் இப்படியொரு விட்டுக் கொடுப்பை நீங்கள் வாழ்க்கையில் கண்டிருக்கவே மாட்டீர்கள். இது தான் உண்மையான வெற்றி. பல பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறது இந்த வீடியோ கட்டாயம் ஒவ்வnருவரும் பாருங்கள் முடிந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் காட்டுங்கள். submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/real-victory-short-film.html"

Friday, October 15, 2010

கிழவனும் பொடியனும்



amazing car story with Tamil subtitles short film by A.R.M. INAS suitable for children s....
எந்தவொரு வேலையாக இருந்தாலும் பலத்துடன் திறமையுடன் சேர்த்து அனுபவமும் சேரும் போது தான் அது ஒரு நிலையான வெற்றியாக அமையும். இன்றைய காலத்தின் தேவையும் அது தான் இளைஞரும் வயோதிபர்களும் சேர்ந்து செயற்படுதல் வேண்டும் submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_5165.html"

ஒரு விரல் சாதனையாளன் nick incridible



nick unbelievable personality amazing incredible man every one must watch his talents கவலையிலும் விரக்திலும் தோல்வியிலும் வாடிப்போன உள்ளங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு மனிதர். ஒரு விரலை மட்டும் வைத்துக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் மனிதர் நிச்சயம் பாருங்கள் உங்கள் உள்ளத்துக்க ஒரு புது தெம்பு பிறக்கும் அது நிச்சயம். இந்த நிமிடம் உங்கள் உள்ளத்தின் மாற்றத்திற்கான நிமிடம். submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/nick-incridible.html"

மா வீரன் ஸெய்யித் குத்ப்


இவர் ஒரு போர் வீரர். இவர் தயாரித்த யுத்த வாள்கள் இன்னும் ஜாஹிலிய்யத்துடன் போர் செய்து கொண்டிருக்கறது. அந்த இவரின் அந்த வாள் எப்பொழுதும் கீழே சரியாது. அவர் மேற்கு சிந்தனைக்கு எதிராக தன் கருத்தால் வாள் தூக்கியவர். தன் கருத்தின் மூலம் இஸ்லாத்தின எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர். அவரின் கருத்துக்களுக்கு பயந்த கோழைகளான இஸ்லாத்தின எதிரிகள் அவரை தூக்கிலிட்டு ஷஹீத் பட்டத்த கொடுத்தனர். நான் இங்கே வாள் என்று சொல்வது உண்மையான வாள் விட தாக்கமுள்ள அவரின் கருத்துக்களை. shaheed seyyid qutb kuthb submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_15.html"

ஒரு விரல் சாதனையாளன் nick incridible man

http://www.youtube.com/watch?v=DXYgR3w6FbI

nick unbelievable personality amazing incredible man every one must watch his talents கவலையிலும் விரக்திலும் தோல்வியிலும் வாடிப்போன உள்ளங்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு மனிதர். ஒரு விரலை மட்டும் வைத்துக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் மனிதர் நிச்சயம் பாருங்கள் உங்கள் உள்ளத்துக்க ஒரு புது தெம்பு பிறக்கும் அது நிச்சயம். இந்த நிமிடம் உங்கள் உள்ளத்தின் மாற்றத்திற்கான நிமிடம். submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/nick-incridible-man.html"

மூளை வளருகிறது - நாம் தான் அதை தடைசெய்கிறோம்

மூளை வளருகிறது - நாம் தான் அதை தடைசெய்கிறோம்


"உனக்கு மூளையே கிடையாதா? என்று யாரையும் திட்டாதீர்கள். எல்லோருக்கும் மூளையிருக்கிறது. அதுமட்டுமின்றி தினமும் மூளை வளருகிறது! ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10,000 நியூரான் செல்கள் (நரம்பு செல்கள்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த ஒரு சில நாட்களிலேயே அழிந்துவிடுகின்றன. தினமும் புதிதாக நரம்புசெல்கள் பிறந்து உடனே அழிந்து போவதால் என்ன பயன்? மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது? புதிதாகப் பிறந்த நரம்பு செல்கள் சாகமல் உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் அதற்கு தினமும் புதிதாக எதையாவது நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். புதிதாகப் பிறக்கும் மூளை செல்லுக்கு வேலை கொடுக்கவில்லையானால் அது செத்துப்போய்விடும்.
இதுதான் என்றில்லை, எதை வேண்டுமானலும் கற்கலாம்; சீட்டாட்டத்தில் புதிதாக ஒரு டிரிக், செஸ் விளையாட்டில் புதிய மூவ், கித்தார் இசை, புதிதாக ஒரு ராகம், புதிய நாவல், கடினமான ஒரு கணக்கு..... குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் ஏதாவதொன்றை முயன்று கற்றுக் கொண்டிருந்தால் தினமும் தோன்றும் 10,000 செல்களில் ஒரு சிலவாவது மூளையில் நிலைத்து நிற்கும்.
பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினங்களுக்குப் பிறந்தபோது எந்த அளவு மூளை இருந்ததோ, பெரியவர்களாகும்போது அதே அளவு, அல்லது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறிதாகி விடும் என்றுதான் இதுநாள் வரை பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உடம்பில் வேறு எங்கு வேண்டுமானாலும் புதிதாக திசுக்கள் தோன்றினாலும் தோன்றலாம், மூளையில் மட்டும் அது சாத்தியமில்லை என்று 1990 வரை கருதிவந்தனர்.
எலிசபெத் கோல்டு (பெண்மணி) என்பவர் நரம்பு செல்கள் புதிது புதிதாக மூளையில் பிறக்கும் என்பதைக் கண்டுபிடித்தபின் நரம்பியலில் ஏகப்பட்ட ஆய்வுகள் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. மூளை வளரந்து கொண்டேபோனால் கபாலம் வெடித்துவிடுமே என்று பயப்படவேண்டாம். மூளையில் காதுக் கதுப்புக்கு உள்ளே இருபுறமும் உள்ள ஹிப்போக் கேம்பஸ் என்ற உறுப்பில்தான் புதிதாக நரம்புசெல்கள் தினமும் தோன்றுகின்றன. 1998 இல் ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது எலிகளுக்கு மட்டுமல்ல, மனிதருக்கும் பொருந்தும் என்று தெரிந்தது. gt;
அதெப்படி நரம்பு செல்கள் புதிதாக முளைக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்? ரொம்ப சிம்ப்பிள். புரோமோ டி ஆக்ஸி யூரிடின் (Bromo deoxy uridine—BrdU)) என்ற கெமிக்கலை இரத்தத்தில் செலுத்தினால் எங்கெல்லாம் உடலில் புதிதாக செல்கள் முளைக்கின்றனவோ அந்த இடமெல்லாம் பளிச்சென்று ஒளி விடும். பச்சை நிற ஒளித்திட்டுகள் செல்கள் புதிதாகத் தோன்றியிருப்பதைக் காட்டிக் கொடுத்தவிடும். எலிகளில் சோதனை செய்தபோது ஹிப்போகேம்பஸ் பகுதியில் தினமும் 5000 முதல் 10,000 செல்கள் புதிதாகத் தோன்றுகின்றன என்பது தெரிந்தது.

மார ்ரிஸ் வாட்டர் மேஸ் (Morris Water Maze) என்று ஒரு பரிசோதனை. எலியை பால் விட்டு கலக்கிய கலங்கலான தண்ணீர்த் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். தொட்டியிலிருந்து வெளியேற அது தத்தளித்து இங்கு மங்கும் நீந்தும். ஓரிடத்தில் பிளாட்பாரம் (மேடை) சட்டென்று புலப்படாமல் மறைந்திருக்கும். ஏதேச்சையாக அதைக் கண்டுபிடித்துவிட்ட எலி அடுத்த இரண்டு மூன்று பரிசோதனையில் அதைக் கற்றுக் கொள்ளும். தொட்டியின் உள்ளே காணப்படும் அடையாளங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஒரே தாவில் மேடையைக் கண்டுபிடித்துத் தப்பித்தவிடும். எலிகளுக்கு பயம், எச்சரிக்கை, தப்பிக்கும் தந்திரம் போன்ற புதிய அனுபவ அறிவுகளை வழங்கிவிட்டு, மூளையில் ஹிப்போ கேம்ப்பஸில் புதிய நரம்பு செல்களை புதிதாக தோன்றுகின்றனவா என்று எண்ணிப்பார்ப்பார்கள். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன.
தினமும் ஆயிரக்கணக்கான நரம்பு செல்கள் வேர்செல்களிலிருந்து உருவாகி முழுவளர்ச்சியை 14 நாட்களில் அடைகின்றன. இப்படி தினமும் பத்தாயிரம் செல்களாவது முற்றி நினைவுகளைப் பதித்துக்கொள்ள தயாராக நிற்கின்றன. அன்றைய தினம் ஏதாவது நினைவில் பதிய வேண்டியதாக இருந்தால் அதற்காக ஒரு சில செல்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை உடனே அழிக்கப்படுகின்றன. மறுநாள் இன்னொரு செட் நியூரான்கள் முற்றி தயார் நிலைக்கு வருகின்றன. எத்தனை செல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்பது கற்றுக் கொள்ளும் அனுபவம், அதன் தீவிரம், அவசரம், அவசியம் ஆகியவை பொறுத்து மாறுகின்றது. அதிக சிக்கலான அனுபவங்களுக்கு அதிக செல்கள் தேவைப்படுகின்றன.
எந்த செல்லை அழிப்பது எந்த செல்லை விடுவது என்பதை நிர்ணயிப்பது அந்தந்த செல்களே. நினைவுப் பதிவில் ஈடுபடும் செல்களைத் தவிர மற்றவை அழிந்துவிடுகின்றன. நினைவு ஆக்கத்தில் சம்மந்தப்பட்ட நரம்புசெல்லில் சில மாறுதல்கள் நடைபெறுகின்றன. நரம்பு செல் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நரம்பு செல், நீண்ட காம்புடைய மல்லிகை மொட்டுபோல் இருக்கும். காம்பினை ஆக்ஸான் என்பார்கள். மொட்டுப்பகுதிதான் செல். அதிலிருந்து நிறைய தலை முடிபோல் இழைகள் வெளிப்படும்; அவற்றை டென்ட்ரைட் என்பார்கள். நினைவு ஆக்கத்தில் ஈடுபட்ட செல்லின் ஆக்ஸானின் முனை ஹிப்போக்கேம்பஸின் ஒருபகுதியாகிய CA3 என்று இடத்துடன் தொடர்பு கொண்டுவிடும். டென்ட்ரைட்டுகள் வேறு நரம்பு செல்களுடன் தொடர்பு கொண்டுவிடும். இப்படி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத நரம்பு செல்கள் செத்துவிடுகின்றன.

பரிசோதனையின் மூலம் எலிகளின் மூளையில் நரம்பு செல் உருவாவதைத் தடுத்தால், அவை புதிதாக சொல்லித்தருவதைக் கற்றுக் கொள்வதில்லை. MAM என்று ஒரு கெமிக்கல்; இதை உடலில் செலுத்தினால் புதிய நினைவுகள், அறிவு அனுபவம் எதுவும் பதியாது. இது நேரடியாக நரம்பு செல்கள் வளர்வதைத் தடைசெய்கிறது. எலிகளிடம் சுலபமாக இப்படி சோதனை செய்யயலாம். மனிதர்களிடம் இது சாத்தியமில்லை, இருந்தாலும் எதிர்பாரதவிதமாக சிலவாய்ப்புகள் கிடைப்பதுண்டு, மூளையில் கேன்ஸர் ஏற்பட்டவர்களுக்கு "கீமோதெராப்பி" (Chemotherepy) என்று ஒரு சிகிச்சை செய்வார்கள், வீரியமிக்க கெமிக்கல் கேன்ஸர் செல்கள் வளருவதைத் தடைசெய்யும். ஹிப்போக்கேம்பஸிலும் செல்வளர்ச்சி தடை ஏற்படுவதால், சில பரிசோதனைகளை இந்நோயளிகளிடமும் செய்து பார்க்க முடிகிறது. இதை கீமோபிரெய்ன் (Chemo brain) என்பார்கள். சிலரிடம் அல்ஷெய்மர் என்ற நரம்பு செல் நோய் இருக்கும். ஹிப்போகேம்பஸில் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு நினைவுகள் மறப்பதும் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளமுடியாதிருப்பதும் தெரிகிறது.
முதுமை வரும்போதே கூடவே மறதியும், மந்த புத்தியும் வந்துவிடும். அவை வராமல் தடுக்க வேண்டுமாயின் அன்பர்களே தினமும் எதையாவது படியுங்கள், ஏரோபிக் உடற்பயிற்சி செய்யுங்கள், நண்பர்களுடன் பொழுது போக்குங்கள். செய்யக்கூடாதவை சிகரெட் பிடிப்பது, குடிப்பது, செய்யவேண்டியது உடற்பயிற்சி, பழங்கள் சாப்பிடுவது, புதிதாக கற்பது. ஆன்ட்டி டிப்ரசன்ட் மாத்திரைகள்கூட நரம்புசெல் நிலைப்பாட்டை அதிகரிக்கிறதாம்.
இந்தக் கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா. இன்றைக்கு குறைந்தது நூறு நரம்புசெல்களாவது உங்களுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் அதற்கு நான் கியாரண்ட்டி! submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post.html"