அது தான்.
கொடுங்ககோலன் பிர்அவ்ன அல்லாஹ்வை எதிர்த்து தான் அல்லாஹ் என்று கூறி கடைசியில் அல்லாஹ்விக் தண்டனைக்கு உட்பட்டுக் கொண்டிருந்தான். அவன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தான் அவன் கடலில் மூழ்கப் போகிறான் அது அவனின் இறுதி நேரம். அக் கொடுங்கோலன் அந்த இறுதி நேரத்தில் தன் வாயால் இவ்வாறு மொழிகிறான். மூஸாவின் றப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் முதலாம் முறை சொல்கிறான். ஆப்படியே அவன் இரண்டாம் முறையும் சொல்ல அவன் வாயை திறக்கும் போது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் அலை அவர்கள் அவனின் வாயில் மண்ணை போடுகிறார் அவன் மறுபடியும் அவ்வாறு சொல்லாமலிருக்க. பிர்அவ்ன் அப்படியே கடலில் மூழ்கி செத்து மடிகிறான்.
மேற் சொன்ன சம்பவத்தை வைத்து ஒரு ஹதீஸ் இப்படி கூறுகிறது.
ஜிப்ரீல் அலை அவர்கள் அவனை 2ம் முறை சொல்லவிடாமல் அவனின் வாயில் மண்ணை போடக் காரணம். அந்த கொடுங்கோலனின் வார்த்தைகளால் அல்லாஹ் அவன் மீது அன்பு கொண்டு அவனை மன்னித்துவிடுவானோ என நினைத்ததால் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.
உண்மையில் இதன் மூலம் நாம் உணர வேண்டிய விடயம் ஜிப்ரீல் அலை அவர்கள் எங்களைவிட அல்லாஹ்வை பற்றி மிக அறிந்தவர் இன்னொரு வார்த்தையில் கூறினார்கள் எங்களைவிட அதிகம் அல்லாஹ்வை புரிந்து கொண்டவர். இப்படிப்பட்ட கொடுங்கோலனை அல்லாஹ் மன்னித்துவிடுவானோ என்று எண்ணுமளவுக்கு அல்லாஹ்வின் அன்பு விசாலமானது என்று ஜிப்ரீல் அலை அவர்கள் தெரிந்து வைத்திருக்கறார்.அது தான் உண்மையும் அல்லாஹ்வின் அன்பு விசாலமானது. பாருங்கள் நாங்கள் யாரும் பிர்அவ்னை விட கொடியவர்கள் இ;ல்லை அல்லாஹ் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளவிட முடியாது. அப்படியிருக்கும் போது நாம் அல்லாஹ்வுக்கு அதற்கு என்ன செய்கிறோம் குறைந்தது தொழுகையை கூட நாங்கள் ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை. தொழுகையை அல்லாஹ் பரிசாகத்தான் தந்தான் அந்த பரிசையே நாம் ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்காமல் உதறி தள்ளுகிறோம். அதுவும் அவன் எம் மீது கோபம் கொள்ளாமல் எங்களுக்கு அருள் புரிந்து வாழவிட்டிருக்கிறான். உலகில் நடக்கும் பாவங்களுக்கு அல்லாஹ் உடனுக்குடனே தண்டனை கொடுத்தால் நிச்சயம் உலகில் யாரும் வாழமாட்டார்கள்.
அல்லாஹ் எங்களுக்கு திருந்த அதிகமான சந்தர்ப்பங்களை தந்திருக்கிறான். அவன் குர்ஆனில் கூட சுவர்க்கத்தை பற்றியே அதிகம் கூறியுள்ளான் காரணம் அவனின் விருப்பமும் எல்லோரும் சுவர்க்கம் போக வேண்டும் என்பது தான். அதற்கு தான் அவன் இந்த உலகில் எங்களுக்கு பல சந்தர்ப்பங்களை தருகிறான். ஆனால் நாமோ அதை கண்டு கொள்வதுமில்லை.
அன்பான அல்லாஹ் கூலி கொடுக்கும் போது கூட தீமைக்கு தீமையின் அளவுக்கு ஏற்பவே தண்டனை கொடுப்பான் ஆனால் நன்மைக்கு அந்த நன்மையைவிட பல மடங்கு கொடுக்கிறான். காரணம் அல்லாஹ் எங்களிடம் வைத்துள்ள அளவற்ற அன்பு.
புதிதாக ஒரு திரைப்படம் வருமானால் முந்திக் கொண்டு பல மணி நேரம் காத்து நின்று காயப்பட்டுக் கொண்டு சண்டை பிடித்துக் கொண்டு சில நேரங்களில் அந்த இடங்களில் ஷஹீத்களாக கூட ஆகுறார்கள் (அதற்காக வேண்டி உயிரை கூட விடுகிறார்கள்). உண்மையில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதில் இருக்கப் போவது சில கூத்தாடிகள் வருவார்கள் அரைநிர்வாணத்துடன் ஆட்டம் போட்டு திரைப்படம் முடிந்துவிடும் அத பார்த்த உள்ளத்தில் கொஞ்சம் சந்தோசம் மாதிரி இருக்கும்.அந்த விபச்சார கூத்தாடிகளுக்காக வேண்டு உயிரை விட்றீங்க அவன் உங்களுக்கு என்ன செய்தான்.
சுவாசிக்க மூக்கை தந்தானா இரு கைகளை தந்தானா சாப்பிட சாப்பாட்டை தந்தானா குறைந்தது உங்க வீட்டுக்கு வந்து ஒரு தேனீர் கோப்பை சரி வந்து குடித்துவிட்டு போனானா கொஞ்சம் யோசியுங்கள் அவன் உங்களுக்கு என்ன செய்தான் ஏன் நீங்கள் அந்த விபச்சார கூத்தாடிகளுக்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு அவன் மீது அன்பு வைக்கிறீர்கள்.
மறுபுறம் பாருங்கள் அன்பான அல்லாஹ் உங்களுக்கு தந்தது என்ன என்று கேட்பதைவிட அவன் உங்களுக்கு தராதது என்ன என்று தான் கேட்க வேண்டும். அல்லாஹ் சொல்கிறான் உங்களுக்கு அருகாமையில் தான் நான் இருக்கிறேன் நீங்கள் கேட்பவையெல்லாம் எனக்கு கேட்கும் தூரத்தில் தான் நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான்
இந்த அற்ப விடயங்களுக்காக வேண்டி அன்பான அல்லாஹ் தந்த நான்கு ரகஆத் பரிசை கூட உதறி தள்ளுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றுமே செய்யாத அந்த உருப்படியற்ற சினிமாவுக்கு 5 மணித்தியாலங்கள் செலவிடுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு வாழ்க்கையையே தந்த அந்த அன்பான அல்லாஹ்வுக்கா வேண்டி 5 நிமிடம் கூட செலவிடுவதில்லை. அப்படியிருந்தும் அல்லாஹ் உங்களை தண்டிக்காமல் விட்டிருக்கிறான் அதுவும் அவனின் விசாலமான அன்பின் காரணமாகத்தான்.
இந்த சந்தர்ப்பம் எல்லாம் நம் உயிர் தொண்டை குழியை அடையும் வரைதான் அதன் பிறகு நாங்கள் என்ன செய்த போதும் பயன் இல்லை.அந்த நேரத்தில் யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது. ஆகவே நாங்கள் எம் உயிர் தொண்டை குழியை அடைய முன்னால் அவனின் அன்பை புரிந்து கொண்டு அவன் சொற்படி நடப்போம்.
எவன் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி). (திர்மிதி, ஸஹீஹூல் ஜாமிஃ).
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_29.html"
உங்களுக்கு ஒன்றுமே செய்யாத அந்த உருப்படியற்ற சினிமாவுக்கு 5 மணித்தியாலங்கள் செலவிடுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு வாழ்க்கையையே தந்த அந்த அன்பான அல்லாஹ்வுக்கா வேண்டி 5 நிமிடம் கூட செலவிடுவதில்லை
ReplyDeletebest ...
ReplyDeletegreat
ReplyDelete