கடைசயில் தோல்வியடையப் போவது நாங்கள் தான்
by Abdul Raheem Mohamed Inas on Sunday, September 11, 2011 at 6:06am
இலங்கை தமிழரை ஒரு நுளம்பு கடித்தால் கூட.....
இந்திய தமிழர்கள் கொதித்துவிடுகிறார்கள்.
இவ்வளவுக்கும் அவர்களின் எந்த வேதத்திலும் சொல்லப்படவில்லை
உங்கள் சமூகம் ஒரு உடலை போன்றது என்று....
ஆனால்
காஷ்மீரில் இரண்டாயிரம் பேரின் புதை குழிகள்...
குஜராத்தில் கற்பென்ற சொல்லுக்கு அர்த்தம் அறியா பல சிறுமிகளின் கற்பு சூரை
பிணங்களாலேயே பாலம் போடுமளவுக்கு மனிதப் பிணங்கள்.....
இவை மனிதப் பிணங்களா என்று சந்தேகம் வருமளவு கருகிய பிணங்கள் குடும்பம் குடும்பமாக?......
இந்த சாபத்துக்கு ஆளாக அவர்கள் செய்த ஓரேயொரு பாவம் முஹம்மத் என்றும் பாத்திமா என்றும்
பெயர் வைத்துக் கொண்டது தான்......
இதை தட்டிக் கேட்க யாருமில்லையா என்று கேட்டேன்...
என்னை நோக்கி ஒரு பயமுறுத்தும் குரல்....
அந்த குரலுக்கு சொந்தகாரர்கள் இப்படுகொலைகளை செய்த மிருகங்கள் தான் என எண்ணினேன்.....
ஆனால் அந்தக் குரல் அவர்களுடையதல்ல.....
அவர்கள் நம்மிலேயே ஒரு கூட்டம்.....
அவர்களின் வேதம் சொல்கிறதாம்
(நீங்கள் அனைவரும் ஒரு உடலைப் போல, காலில் காயம் வந்தால் கண்களால் கண்ணீர் வரவேண்டுமாம் என்று)
அவர்கள் என்னை பார்த்து சவால் விட்டார்கள்.....
முடிந்தால் வாருங்கள் விவாதத்துக்கு...
அங்கு கற்பழிக்கப்பட்டவர்கள், அங்கு குடும்பம் குடும்பமாக தீக்கிரையாக்கப்பட்டவர்கள்,
ஷிர்குவாதிகளா?
பித்அத்வாதிகளா?
கப்று வணங்கிகளா?
என்று.....
அன்பாளன் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்காத
அருந்ததி ராய்கு வந்த கருணையுள்ளம் கூட
இவர்களுக்கு வரவில்லையோ....
கருணையாளன் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றதால்.
அன்பாளன் அவர்களுக்கு இட்ட முதல் கட்டளை கற்பீராக என்று......
ஆனால் அவர்களோ இன்று கல்வியில் தலித்களை விட கீழ் நிலையில்......
பிடிவாதமாய் விவாதம் செய்து செய்து பக்கவாதத்தால் அழிந்து கொண்டிருக்கிறது அந்த சமூகம்.....
என்னை விவாதத்துக்கு அழைப்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்.....
விவாத்தில் நீ வெற்றி பெற்றாலும்...
நான் வெற்றி பெற்றாலும்....
கடைசயில் தோல்வியடையப் போவது நாங்கள் தான்.....
ஏன் தெரியுமா?
நாங்கள் அனைவரும் கலிமா சொன்னவர்கள்....
(மனதில் தோன்றியதை தட்டச்சு செய்தேன் தவறிருந்தால் மன்னிக்கவும்)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/09/blog-post.html"
allahu akbar
ReplyDelete