Total Pageviews

Thursday, November 11, 2010

உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)

உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே 

                                       (குர்ஆன்)


by Abdul Raheem Mohamed Inas on Thursday, November 11, 2010 at 8:19am

நிச்சயமாக அவர்கள் அதனை (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது முற்பகலிலோ(சிறிது நேரமே) (உலகில்) அவர்கள் தங்கியிருந்தது போன்று (அவர்களுக்குத் தோன்றும்).(79:46)

இந்த குர்ஆன் வசனத்தை கவனமாக நாம் பார்போமானால் இந்த உலகம் மிகவும் அற்பமானது என்று நமக்கு தோன்றும்.அதாவது இந்த உலக வாழ்க்கை ஒரு மாலைப்பொழுது அல்லது முற்பகல் பொழுது  போன்று மிகவும் ஒரு குறுகிய நேரம்.


ஒருவன் மறுமைநாளில் தன் உலக  வாழ்வை மீட்டிப்பார்த்தால் அவர்கள் இப்படித்தான் உணர்வார்கள்.உதாரணமாக மாலை நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு நேரம் இருக்கும் கூடினால் ஒரு 3 மணித்தியாலங்கள் இருக்கும். முற்பகல் பொழுதும் பெரும்பாலும் ஒரு சிரிய நேரமே இருக்கும்.அதாவது ஒரு சிரிய பயணம் போகும் நேரம். உதாரணமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணம் செல்லும் நேரம்.  நாங்கள் உலகில் வாழ்நாள் முழுதும் இன்பம் அனுபவித்தோம் என்று வைத்துக்கொள்வோம் அதனை மறுமையோடு ஒப்பிடும் போது அது வெறுமனே 3 மணித்தியால இன்பம் மட்டும் தான். உண்மையில் எம்மால் நிச்சயம் வாழ்நாள் பூராவும் இன்பம் அனுபவிக்க முடியாது ஏனெனில் இன்பம் என்பதை புரிந்துகொள்ளும் போதே எமது வாழ்க்கையில் அரைவாசி முடிந்துவிடும். அந்த இன்பத்தை விளங்கி அனுபவிக்ககும் போது எமக்கு நோய் வயோதிபம் (சீனிவியாதி கொலஸ்ட்ரோல்) அப்படியெல்லாம் வந்து அதில் காலம் கழிந்துவிடும். அப்படிப் பார்த்தால் நாம் உலக இன்பத்தை வாழ்நாள் பூராக அனுபவித்தாலும் அந்த இன்பத்தை மறுமையோடு ஒப்பிட்டால் உலக இன்பம் ஒரு சில மணித்தியாலங்கள் போல் தான் இருக்கும்.

இதை நீங்கள் இன்னும் சற்று ஆழமாக புரியவேண்டுமானால் நீங்கள் உங்கள் கடந்த காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உணர்வு எப்படியிருக்கும் நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள் நாம் இவ்வுலகில் நேற்று தான் பிறந்து வளர்ந்து எல்லாம் நடந்தது போல் இருக்கும். அதாவது கொஞ்சம் காலம் தான் நாம் வாழ்ந்தது போல் நாம் உணர்வோம். அப்படி நாம் கற்பனை செய்யும் போது நாம் சில இடங்களில் யோசிப்போம் நான் இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே நான் அப்படி செய்திருந்தால் நான் முன்னேறியிருப்போமே என்று கைசேதமும் படுவோம்.

அவ்வாறு தான் மறுமை மஹ்ஷரில் நீங்கள் இந்த உலக வாழ்க்கையை கற்பனை செய்து பார்த்தால் இந்த உலக வாழ்க்கை ஒரு சில மணித்தியாலங்கள் போல் தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் அந்த ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக வேண்டி தான் நாம்அடுத்தவனுக்கு குழிபறிக்கிறோம் அடுத்தவனுக்கு காபிர் முனாபிக் என்று பத்வா கொடுக்கிறோம். உலகமே அது தான் என்று கூறிக் கொண்டு இளைஞர்கள் பெண்களின் பின்னால் அழைகிறோம். ஒரு கூட்டம் சினிமாவின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் பணத்தின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் அரசியல்வாதிகளின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் புகழ் பதவியின் பின்னால் அழைகிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் இது எல்லாவற்றின் பின்னால் அழைந்து நாம் அதை பெற்றுக்கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம்  அதை மறுமை வாழ்வோடு ஒப்பிடும் போது அது ஒரு சில மணித்தியால இன்பம் மாத்திரமே.

மஹ்ஷரில் நடக்;கும் ஒரு விடயத்தை சற்று உணர்ந்து பாருங்கள் நாம் இந்த உலகில் ஒரு நாள் தூங்காமல் இருந்தால் நம் நிலை எப்படியிருக்கும் நாம் இங்கு எவ்வளவுதான் பசி தாகம் துன்பம் என்ன வந்தாலும் ஒரு தூக்கம் தூங்கினால் நமக்கு அந்த கஷ்டம் கொஞ்சம் விளங்காமல் போகும். ஆனால் மஹ்ஷரில் தூக்கமும் இருக்காது. தூக்கமில்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் உண்ண உணவில்லாமல் நாம் அங்கு அழையப் போகிறோம். அது மட்டுமல்ல சூரியன் பணிக்கப்படும் வெயில் கூட கடுமையாக இருக்கும். உண்மையில் அந்த காட்சியை கொஞ்சம் சற்று சிந்தித்து பாருங்கள். இந்த உலகில் நாம் ஒரு நாள் தூங்காமல் இருந்தாலே நமது நிலை மோசமாகிவிடும் ஆனால் மஹ்ஷரில் தூக்கம் இல்லை தண்ணீர் இ;ல்லை உணவும் இல்லை ஆயிரக்கணக்கான வருடம் நாம் மஹ்ஷரில் அலைந்து திரிய வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள் நிலைமையை. மஹ்ஷரின் வேதனை தாங்க முடியாமல் மக்கள் சொல்வார்கள் இந்த மஹ்ஷர் வேதனையை நிறுத்திவிட்டு விசாரணையை ஆரம்பித்து எங்களை நரகில் அல்லது சுவர்க்கத்தில் போடுங்கள் என்பார்கள் (விசாரணை நாளினது பயங்கரம் தெரியாமல்).

உண்மையில் மறுமையென்பது நாங்கள் நினைப்பது போல் ஒரு சிரிய விடயம் அல்ல. அது மிகவும் பயங்கரமானது.

பாருங்கள் மனிதர்களில் மடையர்கள் 2 வகை

1.    தனது உலகத்திற்காக தனது ஆகிரத்தை(மறுமையை) இழப்பவன்அதாவது இந்த உலக அற்ப 3 மணித்தியால உலகத்தை அனுபவிப்பதற்காக உலகில் உள்ள அத்தனை பாவங்களையும் செய்பவன். வட்டி ஏமாற்றுதல் மோசடி செய்தல் அடுத்தவனின் சொத்தை திருடுதல் விபச்சாரம் பொய் களவு காதலிக்காக பெற்றோரை புறக்கணித்தல் காபிரான சினிமா கூத்தாடிகளின் பின்னால் அழைதல் இப்படி உலகில் இருக்கும் அத்தனை பாவங்களையும் செய்து தனது மறுமையை தனது உலக இன்பங்களுக்காக பாழாக்கிக் கொள்பவன்.

2.    பிறரின் உலகத்திற்காக தனது ஆகிரத்தை (மறுமையை) நாசமாக்கி கொள்பவன்.அதாவது தனது மனைவி தனது பிள்ளை தனது உறவினர்களை வாழவைக்க தொழுகை இபாதத் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் இவர்கள் எந்நேரம் பார்த்தாலும் பிஸ்னஸ் தன் மகளுக்கு பெரிய இடத்துல் திருமணம் செய்து வைக்க வேண்டும் எமது பிள்ளைகள் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் ரஸூல் மார்க்கம் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் பணம் சேமிப்பதிலேயே அவனது காலம் முடிந்துவிடும் வீடுகட்டுவதிலேயே அவனது ஆயுள் முடிந்துவிடும். பெருநாளைகளுக்கு கூட அவன் வீட்டில் இருக்கமாட்டான் பணம் பணம் பணம்தான் உலகம் என்று அலைந்து திரிவான். கடைசியில் அவன் உலக இன்பத்தையும் இழக்கிறான் மறுமை இன்பத்தையும் இழக்கிறான். அங்கும் நஷ்டம் இங்கும் நஷ்டம். மறுமையில் அவன் யாருக்காக உழைத்தானோ அவர்களே அவனை விட்டு விரண்டோடுவார்கள் அந்த நேரம் கைசேதப்பட்டு  எந்த பயனும் இல்லை.

பாருங்கள் எவ்வளவு பெரிய மடத்தனம் ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக அவன் இழப்பது எந்த கண்ணும் பார்திடாத எந்த காதும் கேட்டிடாத நம்மால் கற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை இழக்கிறான். அது மட்டுமா அவனுக்கு அதற்கு பதிலாக கிடைக்கப் போவது பயங்கரமான வேதனை அவன் கற்பனையும் செய்து பார்த்திடாத வேதனை.

இந்த உலகத்தில் அடிக்கும் கூத்தையெல்லாம் அடித்துவிட்டு அங்கு மறுமை வேதனையின் கடுமையை கண்டவுடன் பாவத்தில் மூழ்கிய மனிதர்கள் கூறும் வார்த்தை நான் மனிதனாக இல்லாமல் மண்ணோடு மண்ணாகியிருந்திருக்க கூடாதா என்பார்கள்.உண்மையில் அது காலம் தாழ்த்திய ஞானம்.

சிந்தித்து பாருங்கள் சகோதரர்களேகுர்ஆனின் பார்வையில் உலக வாழ்ககை ஒரு சில மணித்தியாலங்களே அந்த ஒரு சில மணித்தியால இன்பத்துக்காக வேண்டி நாம் இழக்கப் போவது நிலையான எந்த கண்ணும் கண்டிராத எந்த காதுகளும் கேட்டிராத யாராலும் கற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை.எமக்கு கிடைக்கும் தண்டனையை பொருத்தவரையில் உதாரணமாக நாம் ஒருவரை லேசாக நோண்டுவதாக எடுத்துக் கொள்வோம் லேசாக வழிக்கும் அதே செயலை நாம் பல ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து செய்தால் வேதனை எப்படியிருக்கும் (நிச்சயம் அது கடும் வேதனையாகத்தானிருக்கும்) ஆனால் நரகம் சிரிய வேதனையல்ல மிகவும் கடுமையானது. நரகத்தை கண்டதிலிருந்து அதற்கு பொறுப்பான மலக்கு சிரிக்கவே இல்லை அந்த வேதனை வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.

உலகில் நாம் அனுபவிக்கும் துன்பம் கஷ்டங்கள் அது நரக வேதனையில் துளி கூட இல்லை.

நாங்க்ள கொஞ்சம் காலம் அதாவது 3 மணித்தியாலம் பொறுமையாக இஸ்லாத்தை பின்பற்றினால் அப்படி நாம் இஸ்லாத்தை பின்பற்றுவதால் நமக்கு வரும் கஷ்டம் துன்பம் சோதனை எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து வாழ்ந்தால் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.அல்லாஹ் நாம் மண்ணோடு மண்ணாகியிருக்கக் கூடாதா என்று கைசேதப்படவும் தேவையில்லை.

A.R.M. INAS
inasinas@live.com
inaasinaas.blogspot.com
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/3.html"

Monday, November 8, 2010

உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.

உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.

ஹஜ்ஜூப் பெருநாள் வருகிறது எல்லோரும் அதைப்பற்றியே பேசுகிறார்கள் அந்த நாட்களின் சிறப்புகளை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நான் இங்கே குறிப்பிட வருவது ஹஜ்ஜூப் பெருநாள் என்பதன் மூலம் நாம் உணர்வது என்ன? அதன் நோக்கம் என்ன.


ஹஜ்ஜூப் பெருநாளுக்கு இன்னுமொரு பெயர் தான் தியாகத்திருநாள். அதாவது இப்றாஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவுகூர்வது என்றும் கூறலாம்.நாம் எல்லோரும் அவரின் தியாகத்தை நினைவுகூர்வதுடன் விட்டுவிடுகிறோம். உண்மையில் அதை நினைவுகூர்வது மட்டும் போதாது அவரின் தியாகத்தை நாம் உணர முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் அது எம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

என்ன இவர் சொல்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அந்த நபியின் தியாகத்தை உணர ஒரு வழி முடியுமானால் முயற்சி செய்யுங்கள்.

ஹஜ் பெருநாளின் ஒரு முக்கிய நிகழ்வு தான் உழ்ஹிய்யா கொடுப்பது. அதாவது இப்றாஹீம் அலை தனது நீண்ட காலம் காத்திருந்து பெற்றெடுத்த மகனை அல்லாஹ்வுக்காக அருக்க முற்பட்டது.இந்த சம்பவத்தை நாம் ஓரிரண்டு வரிகளில் சொல்லி முடித்தாலும் உண்மையில் அது ஒரு உணர்வுபூர்வமாக அணுக வேண்டிய சம்பவம்.

அதை நாம் practical aha உணர்ந்து பார்க்கலாம்.அதாவது உழ்ஹிய்யாவுக்காக நாம் மாட்டை அருக்கும் போது நாம் முடியுமானால் எம் மனதில் ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அங்கு அருப்பதற்காக தயார் நிலையில் இருப்பது எனது சொந்த மகன் நான் நீண்ட காலம் பெற்று வளர்த்த மகன். அல்லது  உலகில் எனக்கு மிகவும் அன்புக்குரிய நபர். என்று சற்று கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் அப்படியான ஒரு செயலுக்கு முற்படுவீரா. சொந்த மகன நீங்கள் அருப்பீர்களா அல்லாஹ்வுக்காக.
நிச்சயம் அது எங்களால் முடியாத காரியம் ஆனால் நம் இப்றாஹீம் அலை அவர்கள் தன் மகனை அருத்தார்கள் ஆனால் அருபடவில்லை. முடியுமானால் அந்த சூழ்நிலையை உங்கள் மனதில் கற்பனை செய்து பாருங்கள்.
ஒரே ஒரு மகன்
அதுவும் நீண்டகாலத்தின் பின் கிடைத்த மகன்.
அல்லாஹ்விடமிருந்து கட்டளை வருகிறது அவரை அருத்து பழியிடுங்கள்.
நபி திருப்பி அல்லாஹ்விடம் ஒரு கேள்விகூட கேட்கவில்லை.
மகன் தந்தையிடம் கேட்டது ஒரே ஒரு கேள்வி தான் இது அல்லாஹ்வின் கட்டளையா?
உண்மையில் நீங்கள் அந்த சம்பவத்தை மணக்கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அந்த  தியாகம் யாரால் செய்ய முடியும்.

உண்மையில் நீங்கள் தியாகத் திருநாளை இப்படி உணர்வுபூர்மாக பார்;த்தால்.நிச்சயம் அது எமது மனமாற்றத்துக்கு வழிவகுக்கும்.உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.


இப்படி இப்றாஹீம் அலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் இவ்வாறான கடும் சோதனைகளை சந்தித்தவர் அவரின் வாழ்க்கை சம்பவங்களை உணர்வுபூர்வமாக அனுக ஒரு சிறந்த சந்தர்ப்பம் தான் இந்த தியாகத் திருநாள்.
முடியுமானால் உணர்ந்து பாருங்கள்.

A.R.M. INAS
inasinas@live.com

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_08.html"

Sunday, November 7, 2010

காட்டுமிராண்டிகளின் மதம் இஸ்லாம்

காட்டுமிராண்டிகளின் மதம் இஸ்லாம்



ISLAM VIOLENT
WANMURAI MAZAM.....
KAATUMIRANDI MAZAM....
PARUNGAL INDA VIDEO submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_07.html"

Tuesday, November 2, 2010

எனது இந்த சிரிய படைப்பை உங்கள் இணையத்தில் பதிந்ததற்கு மிக்க நன்றிகள்

Malcom X short film published in oruummah.org

One World One Ummah

Malcolm X என்ற அமெரிக்க விடுதலைப் போராளி

குறும் படத்தை பார்க்க  click the link

வீடியோ ஆக்கம்: அப்துல் ரஹீம் முஹமட் இனாஸ்
இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க  இஸ்லாமிய  போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X .
Malcolm X- கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக 1965 ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் X ஒருவனால் சுட்டு கொல்லபட்டார் சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன் இவன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை விரிவாக பார்க்க
அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர் FBI குறிவைத்து கொலை செய்யதுவிட துடித்து இறுதியில் .. கொலை செய்யப்பட்டார் அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் அத்திவாரம் தகர்க்கப்பட்டதாக கருதியது
மால்கம் X அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்ற தீபத்தை அணைத்திட அமெரிக்க மேலாதிக்கம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனால் அமெரிக்க மேலாதிக்கதினால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியை தடுக்க முடியவில்லை – மால்கம் X அவர் கொல்லப்படவில்லை இன்னும் சுத்தமான விடுதலையையும் சுதந்திரத்தையும்  சுவாசிக்க துடிக்கும் உள்ளங்களில் வாழ்கின்றார்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_02.html"

கருப்பு இனத்தின் அழிவு

கருப்பர்கள் மனிதர்களா?
இல்லை மிருகங்களா?
இல்லை அதைவிட கேவலமானவர்களா? submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post.html"

Friday, October 29, 2010

கலிமா சொன்ன பிர்அவ்ன்

அண்மையில் ஒரு அருமையான எல்லோரும் அறிந்த ஒரு சம்பவத்தை வித்தியாசமான கோணத்தில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
அது தான்.


கொடுங்ககோலன் பிர்அவ்ன அல்லாஹ்வை எதிர்த்து தான் அல்லாஹ் என்று கூறி கடைசியில் அல்லாஹ்விக் தண்டனைக்கு உட்பட்டுக் கொண்டிருந்தான். அவன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தான் அவன் கடலில் மூழ்கப் போகிறான் அது அவனின் இறுதி நேரம். அக் கொடுங்கோலன் அந்த இறுதி நேரத்தில் தன் வாயால் இவ்வாறு மொழிகிறான். மூஸாவின் றப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் முதலாம் முறை சொல்கிறான். ஆப்படியே அவன் இரண்டாம் முறையும் சொல்ல அவன் வாயை திறக்கும் போது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் அலை அவர்கள் அவனின் வாயில் மண்ணை போடுகிறார் அவன் மறுபடியும் அவ்வாறு சொல்லாமலிருக்க. பிர்அவ்ன் அப்படியே கடலில் மூழ்கி செத்து மடிகிறான்.

மேற் சொன்ன சம்பவத்தை வைத்து ஒரு ஹதீஸ் இப்படி கூறுகிறது.
ஜிப்ரீல் அலை அவர்கள் அவனை 2ம் முறை சொல்லவிடாமல் அவனின் வாயில் மண்ணை போடக் காரணம். அந்த கொடுங்கோலனின் வார்த்தைகளால் அல்லாஹ் அவன் மீது அன்பு கொண்டு அவனை மன்னித்துவிடுவானோ என நினைத்ததால் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.
உண்மையில் இதன் மூலம் நாம் உணர வேண்டிய விடயம் ஜிப்ரீல் அலை அவர்கள் எங்களைவிட அல்லாஹ்வை பற்றி மிக அறிந்தவர் இன்னொரு வார்த்தையில் கூறினார்கள் எங்களைவிட அதிகம் அல்லாஹ்வை புரிந்து கொண்டவர். இப்படிப்பட்ட கொடுங்கோலனை அல்லாஹ் மன்னித்துவிடுவானோ என்று எண்ணுமளவுக்கு அல்லாஹ்வின் அன்பு விசாலமானது என்று ஜிப்ரீல் அலை அவர்கள் தெரிந்து வைத்திருக்கறார்.அது தான் உண்மையும் அல்லாஹ்வின் அன்பு விசாலமானது.

பாருங்கள் நாங்கள் யாரும் பிர்அவ்னை விட கொடியவர்கள் இ;ல்லை அல்லாஹ் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளவிட முடியாது. அப்படியிருக்கும் போது நாம் அல்லாஹ்வுக்கு அதற்கு என்ன செய்கிறோம் குறைந்தது தொழுகையை கூட நாங்கள் ஒழுங்காக நிறைவேற்றுவதில்லை. தொழுகையை அல்லாஹ் பரிசாகத்தான் தந்தான் அந்த பரிசையே நாம் ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்காமல் உதறி தள்ளுகிறோம். அதுவும் அவன் எம் மீது கோபம் கொள்ளாமல் எங்களுக்கு அருள் புரிந்து வாழவிட்டிருக்கிறான். உலகில் நடக்கும் பாவங்களுக்கு அல்லாஹ் உடனுக்குடனே தண்டனை கொடுத்தால் நிச்சயம் உலகில் யாரும் வாழமாட்டார்கள்.

அல்லாஹ் எங்களுக்கு திருந்த அதிகமான சந்தர்ப்பங்களை தந்திருக்கிறான். அவன் குர்ஆனில் கூட சுவர்க்கத்தை பற்றியே அதிகம் கூறியுள்ளான் காரணம் அவனின் விருப்பமும் எல்லோரும் சுவர்க்கம் போக வேண்டும் என்பது தான். அதற்கு தான் அவன் இந்த உலகில் எங்களுக்கு பல சந்தர்ப்பங்களை தருகிறான். ஆனால் நாமோ அதை கண்டு கொள்வதுமில்லை.

அன்பான அல்லாஹ் கூலி கொடுக்கும் போது கூட தீமைக்கு தீமையின் அளவுக்கு ஏற்பவே தண்டனை கொடுப்பான் ஆனால் நன்மைக்கு அந்த நன்மையைவிட பல மடங்கு கொடுக்கிறான். காரணம் அல்லாஹ் எங்களிடம் வைத்துள்ள அளவற்ற அன்பு.

புதிதாக ஒரு திரைப்படம் வருமானால் முந்திக் கொண்டு பல மணி நேரம் காத்து நின்று காயப்பட்டுக் கொண்டு சண்டை பிடித்துக் கொண்டு சில நேரங்களில் அந்த இடங்களில் ஷஹீத்களாக கூட ஆகுறார்கள் (அதற்காக வேண்டி உயிரை கூட விடுகிறார்கள்). உண்மையில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதில் இருக்கப் போவது சில கூத்தாடிகள் வருவார்கள் அரைநிர்வாணத்துடன் ஆட்டம் போட்டு திரைப்படம் முடிந்துவிடும் அத பார்த்த உள்ளத்தில் கொஞ்சம் சந்தோசம் மாதிரி இருக்கும்.அந்த விபச்சார கூத்தாடிகளுக்காக வேண்டு உயிரை விட்றீங்க அவன் உங்களுக்கு என்ன செய்தான்.

சுவாசிக்க மூக்கை தந்தானா இரு கைகளை தந்தானா சாப்பிட சாப்பாட்டை தந்தானா குறைந்தது உங்க வீட்டுக்கு வந்து ஒரு தேனீர் கோப்பை சரி வந்து குடித்துவிட்டு போனானா கொஞ்சம் யோசியுங்கள் அவன் உங்களுக்கு என்ன செய்தான் ஏன் நீங்கள் அந்த விபச்சார கூத்தாடிகளுக்கு உயிரை கொடுக்கும் அளவுக்கு அவன் மீது அன்பு வைக்கிறீர்கள்.


மறுபுறம் பாருங்கள் அன்பான அல்லாஹ் உங்களுக்கு தந்தது என்ன என்று கேட்பதைவிட அவன் உங்களுக்கு தராதது என்ன என்று தான் கேட்க வேண்டும். அல்லாஹ் சொல்கிறான் உங்களுக்கு அருகாமையில் தான் நான் இருக்கிறேன் நீங்கள் கேட்பவையெல்லாம் எனக்கு கேட்கும் தூரத்தில் தான் நான் இருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான்

இந்த அற்ப விடயங்களுக்காக வேண்டி அன்பான அல்லாஹ் தந்த நான்கு ரகஆத் பரிசை கூட உதறி தள்ளுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றுமே செய்யாத அந்த உருப்படியற்ற சினிமாவுக்கு 5 மணித்தியாலங்கள் செலவிடுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு வாழ்க்கையையே தந்த அந்த அன்பான அல்லாஹ்வுக்கா வேண்டி 5 நிமிடம் கூட செலவிடுவதில்லை. அப்படியிருந்தும் அல்லாஹ் உங்களை தண்டிக்காமல் விட்டிருக்கிறான் அதுவும் அவனின் விசாலமான அன்பின் காரணமாகத்தான்.

இந்த சந்தர்ப்பம் எல்லாம் நம் உயிர் தொண்டை குழியை அடையும் வரைதான் அதன் பிறகு நாங்கள் என்ன செய்த போதும் பயன் இல்லை.அந்த நேரத்தில் யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது.  ஆகவே நாங்கள் எம் உயிர் தொண்டை குழியை அடைய முன்னால் அவனின் அன்பை புரிந்து கொண்டு அவன் சொற்படி நடப்போம்.


எவன் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி). (திர்மிதி, ஸஹீஹூல் ஜாமிஃ).
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_29.html"

Thursday, October 28, 2010

ஹாஜிகள் எல்லாரும் நரகம் போவங்களா?




மறுமை நாளை பற்றி சில விடயங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மறுமையில் பெரிய மனிதர்கள் அதிகமானோர் நரகத்துக்கு செல்வர்.
அப்பாவி மக்கள் அதிகமானோர் சுவர்க்கம் செல்வர்.
அதிலே கூறப்பட்டது
உலகிலே பெரியவர்களாக பணக்காரர்களாக பெரிய பதவி வகித்தவர்களாக பெரிய ஆலிம்களாக கருதப்பட்டோரே அதிகம் நரகத்திலிப்பார்கள் என்று.
ஆனால் வாழக்கையில் கீழ் மட்டத்தில் மிகவும் சாதாரணமாக ஏழையாக ஒரு சிரிய வேலையை செய்து கொள்ளவும் அங்கேயும் இங்கேயும் அலைந்து இன்னல்பட்டு சீரழிந்து அந்த அதிகாரியிடம் ஏச்சுக் கேட்டு இந்த அதிகாரியிடமும் ஏச்சு  கேட்டு இப்படி வழமையான வாழ்க்கையை மிச்சம் சிரமத்தோடு கழிக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இலகுவாக சுவர்க்கத்துக்கு செல்வர்.
காரணம்.....
இவ்வுலகில் பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு  பணக்காரர்களுக்கு பெரிய அறிவாளிகளுக்கு அதிகமாக வரும் சோதனை தான். இவர்களின் அந்தஸ்து அதிகரிக்க அதிகரிக்க இவர்களுடன் சேர்ந்து

பெருமை

கர்வம்

அகங்காரம்

நான் தான் உலகில் சிறந்தவன்
என்னை விட்டால் வேறு யாருமில்லை
நான் தான் உலகின் அதி சிறந்த பேச்சாளன் புத்திசாலி
என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
அது மட்டுமல்ல அவர்கள் உலகில் பெரிய பொறுப்புக்களை சுமந்திருப்பர் ஆனால் அதை அவர் ஒழுங்கான முறையில் நிறைவேற்றாமல் இருந்திருப்பார்.
மறுமை நாளில் பலர் பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார்களாம்.
அது ஏன் என்றால் மறுமை நாளில் அவர்கள் தெரிந்து கொள்வார்கள் அவர்கள் நரகவாதியா சுவர்க்வாதியா என்பதனை. அந்த சந்தர்ப்பத்தில் இந்த உலகில் உயர்ந்தவர்களாக எண்ணத்தால் கருதிக் கொண்டவர்கள் நரகத்துக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பார்கள்
அந்த நரகத்துக்கு நிச்சயிக்கப்பட்டவர்கள் இந்த உலகில் இழிவாக கருதியவர்கள்
( தனது வீட்டு வேலைக்காரன் மற்றும் தனது அலுவலை செய்து கொள்ள வந்து தன் அதிகாரத்தால் இழிவு படுத்தப்பட்டவர்கள் அரச அலுவலகங்களில் இவற்றை காணலாம் சாதாரண மக்களை அரச அதிகாரிகள் பொருட்படுத்தவே மாட்டார்கள் அதிகமான ஆலிம்மார்களும் இப்படித்தான்).

தன்னைவிட கீழ் உள்ளவர்கள் சிரியவர்கள் சுவர்க்கம் செல்லும் போது பெரியவர்கள் ஹாஜியார்மார்கள் பெரிய பேச்சாளர்கள் ஆலிம்கள் அரச அதிகாரிகள் டாக்டர்கள் என்ஜினியர்கள் அந்த உலகில் கீழ் நிலையிலிருந்தர்களை பார்த்து வெட்கத்தால் தலை குனிந்து நிற்பர். தலையை உயர்த்தி பார்த்தால் அவர்களுக்கு அவமானமாகிப் போய்விடும்.
இந்த உலகில் தாழந்து இழிவடைந்து அப்பாவியாக இருந்த மக்களுக்கு பொதுவாக இந்த பிரச்சினை வராது ஏனெனில் அவர்கள் இந்த உலகத்தில் இருந்தது அந்த நிலையில் தான்.
ஆனால் உயர்ந்த பெரிய பதவிவகித்தவர்கள் தன் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றாத காரணத்தாலும் பெருமையடித்து சிரிய அந்தஸ்துள்ளவர்களை இழிவாக கருதியதன் காரணத்தாலும் பிர்அவ்னின் தலைமையில் தலைகுனிந்து அவமானப்பட்டு இழிவடைந்திருப்பார்கள்.
இதன் குறிக்கோள் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்கள் நரகவாதிகள் கெட்டவர்கள் என்று பத்வா கொடுப்பதல்ல. இந்த தீனை நிலைநாட்டுவதில் உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் உயர்ந்த அந்தஸ்து பதவி வகிப்பவர் ஆலிம்களுக்கு பொறுப்புக்கள் அதிகம் அது ஒரு அமானிதம் என்றே கருத வேண்டும். சாதாரண கீழ் நிலையிலுள்ளவனை பொருத்தவரையில் அவன் இவ்வாறான உயர்ந்த பொறுப்புக்களை சுமக்காததன் காரணமாக தப்பித்துக் கொள்கிறான்.


அது மட்டுமல்ல இன்றைய பணக்காரர்களின் பெரிய பொறுப்பு வறுமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது அது ஒரு அவர்களுக்கான அமானிதம் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் சமூகப் பொறுப்பை நிறைவேற்றாமல் தன் குடுப்பத்தோடு ஆயிரமாயிரம் ஹஜ் செய்தாலும் பயன் இருக்குமா? அல்லாஹ் அவர்களுக்கு வாரி வாரி பணத்தை கொடுத்தது நினைத்து நினைத்து கார் வாங்கவும் குடும்பத்துடன் போய் ஆயிரம் ஹஜ் உம்ரா செய்து நாங்கள் இவ்வளவு ஹஜ் செய்தோம் என்று பீற்றி கொள்வதற்கு அல்ல........

“நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவை விளகிக்கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக ( அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.”( சூரத்துல் அஹ்ஷாப்: 72) submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_28.html"

Friday, October 22, 2010

ZUHAIR LAWYER short film



UMMA SOLLUM MAHAN NEE SCIENCE SEI
WAPPA SOLLUM COMMERCE SEI
SCHOOL SOLLUM MATHS
SEI MAHAN ENNATHA SEIYA

மணமகளுக்கு சம்மதமில்லாத திருமணம் போல் தான் இதுவும். அங்கு மணமகள் பாதிக்கப்படுவாள் இங்கு மாணவன் பாதிக்கப்படுகிறான். இந்த விடயம் ஒவ்வொரு வருடமும் நம் பாடசாலைகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இங்கு சொல்ல வருவது இதுவும் ஒரு பிரச்சினைதான் இது மட்டும் தான் பிரச்சினை என்று சொல்ல வரவில்லை. நல்லது கெட்டது என்ன கருத்தாக இருந்தாலும் இங்கே பதியுங்கள் . அது ஒரு சொல்லாக இருந்தாலும் சரி. short film
on Yotube
http://www.youtube.com/watch?v=0ndrzEPivYo submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/zuhair-lawyer-short-film.html"

Thursday, October 21, 2010

ஒற்றுமையின் பலம் power of unity NEMO




amazing scene about team work from film NEMO..
ஒற்றுமையின் பலத்தை எடுத்துக் காட்டும் ஒரு அற்புதமான வீடியோ நேமோ படத்திலிருந்து தமிழில் for children
same video on youtube
http://www.youtube.com/watch?v=wM7ZnaTSr5M submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/power-of-unity-nemo.html"