Total Pageviews

Thursday, October 28, 2010

ஹாஜிகள் எல்லாரும் நரகம் போவங்களா?




மறுமை நாளை பற்றி சில விடயங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மறுமையில் பெரிய மனிதர்கள் அதிகமானோர் நரகத்துக்கு செல்வர்.
அப்பாவி மக்கள் அதிகமானோர் சுவர்க்கம் செல்வர்.
அதிலே கூறப்பட்டது
உலகிலே பெரியவர்களாக பணக்காரர்களாக பெரிய பதவி வகித்தவர்களாக பெரிய ஆலிம்களாக கருதப்பட்டோரே அதிகம் நரகத்திலிப்பார்கள் என்று.
ஆனால் வாழக்கையில் கீழ் மட்டத்தில் மிகவும் சாதாரணமாக ஏழையாக ஒரு சிரிய வேலையை செய்து கொள்ளவும் அங்கேயும் இங்கேயும் அலைந்து இன்னல்பட்டு சீரழிந்து அந்த அதிகாரியிடம் ஏச்சுக் கேட்டு இந்த அதிகாரியிடமும் ஏச்சு  கேட்டு இப்படி வழமையான வாழ்க்கையை மிச்சம் சிரமத்தோடு கழிக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இலகுவாக சுவர்க்கத்துக்கு செல்வர்.
காரணம்.....
இவ்வுலகில் பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு  பணக்காரர்களுக்கு பெரிய அறிவாளிகளுக்கு அதிகமாக வரும் சோதனை தான். இவர்களின் அந்தஸ்து அதிகரிக்க அதிகரிக்க இவர்களுடன் சேர்ந்து

பெருமை

கர்வம்

அகங்காரம்

நான் தான் உலகில் சிறந்தவன்
என்னை விட்டால் வேறு யாருமில்லை
நான் தான் உலகின் அதி சிறந்த பேச்சாளன் புத்திசாலி
என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
அது மட்டுமல்ல அவர்கள் உலகில் பெரிய பொறுப்புக்களை சுமந்திருப்பர் ஆனால் அதை அவர் ஒழுங்கான முறையில் நிறைவேற்றாமல் இருந்திருப்பார்.
மறுமை நாளில் பலர் பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார்களாம்.
அது ஏன் என்றால் மறுமை நாளில் அவர்கள் தெரிந்து கொள்வார்கள் அவர்கள் நரகவாதியா சுவர்க்வாதியா என்பதனை. அந்த சந்தர்ப்பத்தில் இந்த உலகில் உயர்ந்தவர்களாக எண்ணத்தால் கருதிக் கொண்டவர்கள் நரகத்துக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பார்கள்
அந்த நரகத்துக்கு நிச்சயிக்கப்பட்டவர்கள் இந்த உலகில் இழிவாக கருதியவர்கள்
( தனது வீட்டு வேலைக்காரன் மற்றும் தனது அலுவலை செய்து கொள்ள வந்து தன் அதிகாரத்தால் இழிவு படுத்தப்பட்டவர்கள் அரச அலுவலகங்களில் இவற்றை காணலாம் சாதாரண மக்களை அரச அதிகாரிகள் பொருட்படுத்தவே மாட்டார்கள் அதிகமான ஆலிம்மார்களும் இப்படித்தான்).

தன்னைவிட கீழ் உள்ளவர்கள் சிரியவர்கள் சுவர்க்கம் செல்லும் போது பெரியவர்கள் ஹாஜியார்மார்கள் பெரிய பேச்சாளர்கள் ஆலிம்கள் அரச அதிகாரிகள் டாக்டர்கள் என்ஜினியர்கள் அந்த உலகில் கீழ் நிலையிலிருந்தர்களை பார்த்து வெட்கத்தால் தலை குனிந்து நிற்பர். தலையை உயர்த்தி பார்த்தால் அவர்களுக்கு அவமானமாகிப் போய்விடும்.
இந்த உலகில் தாழந்து இழிவடைந்து அப்பாவியாக இருந்த மக்களுக்கு பொதுவாக இந்த பிரச்சினை வராது ஏனெனில் அவர்கள் இந்த உலகத்தில் இருந்தது அந்த நிலையில் தான்.
ஆனால் உயர்ந்த பெரிய பதவிவகித்தவர்கள் தன் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றாத காரணத்தாலும் பெருமையடித்து சிரிய அந்தஸ்துள்ளவர்களை இழிவாக கருதியதன் காரணத்தாலும் பிர்அவ்னின் தலைமையில் தலைகுனிந்து அவமானப்பட்டு இழிவடைந்திருப்பார்கள்.
இதன் குறிக்கோள் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்கள் நரகவாதிகள் கெட்டவர்கள் என்று பத்வா கொடுப்பதல்ல. இந்த தீனை நிலைநாட்டுவதில் உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் உயர்ந்த அந்தஸ்து பதவி வகிப்பவர் ஆலிம்களுக்கு பொறுப்புக்கள் அதிகம் அது ஒரு அமானிதம் என்றே கருத வேண்டும். சாதாரண கீழ் நிலையிலுள்ளவனை பொருத்தவரையில் அவன் இவ்வாறான உயர்ந்த பொறுப்புக்களை சுமக்காததன் காரணமாக தப்பித்துக் கொள்கிறான்.


அது மட்டுமல்ல இன்றைய பணக்காரர்களின் பெரிய பொறுப்பு வறுமை பிரச்சினைக்கு தீர்வு காண்பது அது ஒரு அவர்களுக்கான அமானிதம் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் சமூகப் பொறுப்பை நிறைவேற்றாமல் தன் குடுப்பத்தோடு ஆயிரமாயிரம் ஹஜ் செய்தாலும் பயன் இருக்குமா? அல்லாஹ் அவர்களுக்கு வாரி வாரி பணத்தை கொடுத்தது நினைத்து நினைத்து கார் வாங்கவும் குடும்பத்துடன் போய் ஆயிரம் ஹஜ் உம்ரா செய்து நாங்கள் இவ்வளவு ஹஜ் செய்தோம் என்று பீற்றி கொள்வதற்கு அல்ல........

“நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவை விளகிக்கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக ( அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.”( சூரத்துல் அஹ்ஷாப்: 72)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_28.html"

1 comment:

  1. ஒரு சில பணக்காரர்கள் பெயர் எடுக்கவும்,பெருமைக்காகவும் வேலை செய்வர்.
    என் அனுபவத்தில் சொல்கிறேன்,பணக்காரரிடம் வேலை செய்யும் எத்தனையோ பேர்,
    அவர்களிடம் கேவலமான ஏச்சுகளுக்கு மத்தியில் வறுமைக்காக தொழில் செய்கிறார்கள்.
    இரகசியமாக மேலதிக உதவி கேட்கும் போது 400,500 ஐ கொடுப்பர்,இதையே பகிரமாக கேட்கும் போது 5000,10000 என பெயர் எடுப்பதற்கும் சேர்த்து கொடுப்பர்.
    என்னதான் தான் போய் தொழுகிற பள்ளிக்கு,வாகனத்துக்கு வீட்டுக்கு என ஏ/சி பண்ணி வாழ்ந்தாலும்,கடைசியில் ஒன்றுமே இல்லாத கப்ருக்கு தானே போகவேண்டும்.!!!!!!!!!!
    {முடிந்தால் சிலர் கப்ரையும் மொளத்தா போக முன்னே ஏ/சி பண்ணினாத்தான்}

    ReplyDelete