Watch this.... You will definitely share this..(Tamil) from mohamedinas on Vimeo.
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/12/watch-this-you-will-definitely-share.html"மன மாற்றத்துக்கான முதல் படி.... வித்தியாசமான சிந்தனைகள்..... சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும்.... சின்ன சின்ன படைப்புக்கள்....
Total Pageviews
Thursday, December 29, 2011
Watch this.... You will definitely share this..(Tamil)
Watch this.... You will definitely share this..(Tamil)
Tuesday, October 18, 2011
சோதனையில் சாதனை (Motivation)
பாண் விற்பனை செய்தவர் பிரதமர்.
பேப்பர் விற்பனை செய்தவர் ஜனாதிபதி
கோயில் வாசலில் படுத்துறங்கியவர் உலகின் மாபெரும் கணணி விற்பன்னர்.
முயற்சியே இவர்களின் வெற்றி
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/10/motivation.html"
பேப்பர் விற்பனை செய்தவர் ஜனாதிபதி
கோயில் வாசலில் படுத்துறங்கியவர் உலகின் மாபெரும் கணணி விற்பன்னர்.
முயற்சியே இவர்களின் வெற்றி
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/10/motivation.html"
Wednesday, September 14, 2011
கடைசயில் தோல்வியடையப் போவது நாங்கள் தான்
கடைசயில் தோல்வியடையப் போவது நாங்கள் தான்
by Abdul Raheem Mohamed Inas on Sunday, September 11, 2011 at 6:06am
இலங்கை தமிழரை ஒரு நுளம்பு கடித்தால் கூட.....
இந்திய தமிழர்கள் கொதித்துவிடுகிறார்கள்.
இவ்வளவுக்கும் அவர்களின் எந்த வேதத்திலும் சொல்லப்படவில்லை
உங்கள் சமூகம் ஒரு உடலை போன்றது என்று....
ஆனால்
காஷ்மீரில் இரண்டாயிரம் பேரின் புதை குழிகள்...
குஜராத்தில் கற்பென்ற சொல்லுக்கு அர்த்தம் அறியா பல சிறுமிகளின் கற்பு சூரை
பிணங்களாலேயே பாலம் போடுமளவுக்கு மனிதப் பிணங்கள்.....
இவை மனிதப் பிணங்களா என்று சந்தேகம் வருமளவு கருகிய பிணங்கள் குடும்பம் குடும்பமாக?......
இந்த சாபத்துக்கு ஆளாக அவர்கள் செய்த ஓரேயொரு பாவம் முஹம்மத் என்றும் பாத்திமா என்றும்
பெயர் வைத்துக் கொண்டது தான்......
இதை தட்டிக் கேட்க யாருமில்லையா என்று கேட்டேன்...
என்னை நோக்கி ஒரு பயமுறுத்தும் குரல்....
அந்த குரலுக்கு சொந்தகாரர்கள் இப்படுகொலைகளை செய்த மிருகங்கள் தான் என எண்ணினேன்.....
ஆனால் அந்தக் குரல் அவர்களுடையதல்ல.....
அவர்கள் நம்மிலேயே ஒரு கூட்டம்.....
அவர்களின் வேதம் சொல்கிறதாம்
(நீங்கள் அனைவரும் ஒரு உடலைப் போல, காலில் காயம் வந்தால் கண்களால் கண்ணீர் வரவேண்டுமாம் என்று)
அவர்கள் என்னை பார்த்து சவால் விட்டார்கள்.....
முடிந்தால் வாருங்கள் விவாதத்துக்கு...
அங்கு கற்பழிக்கப்பட்டவர்கள், அங்கு குடும்பம் குடும்பமாக தீக்கிரையாக்கப்பட்டவர்கள்,
ஷிர்குவாதிகளா?
பித்அத்வாதிகளா?
கப்று வணங்கிகளா?
என்று.....
அன்பாளன் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்காத
அருந்ததி ராய்கு வந்த கருணையுள்ளம் கூட
இவர்களுக்கு வரவில்லையோ....
கருணையாளன் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றதால்.
அன்பாளன் அவர்களுக்கு இட்ட முதல் கட்டளை கற்பீராக என்று......
ஆனால் அவர்களோ இன்று கல்வியில் தலித்களை விட கீழ் நிலையில்......
பிடிவாதமாய் விவாதம் செய்து செய்து பக்கவாதத்தால் அழிந்து கொண்டிருக்கிறது அந்த சமூகம்.....
என்னை விவாதத்துக்கு அழைப்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்.....
விவாத்தில் நீ வெற்றி பெற்றாலும்...
நான் வெற்றி பெற்றாலும்....
கடைசயில் தோல்வியடையப் போவது நாங்கள் தான்.....
ஏன் தெரியுமா?
நாங்கள் அனைவரும் கலிமா சொன்னவர்கள்....
(மனதில் தோன்றியதை தட்டச்சு செய்தேன் தவறிருந்தால் மன்னிக்கவும்)
Sunday, June 19, 2011
சாக்கடையை சரித்திரமாக மாற்றியவர்
இன்றைய உலகின் உண்மையான தைரியமிக்க ஹீரொ.
இவரின் சாதனைகளை பட்டியலிடுவது மிகவும் சிரமம்....
ஏனெனில் அவரின் சாதனைகள் எண்ணிலடங்காதவை...
யாராலும் கற்பனை செய்து கூடு பார்க்க முடியாதவை...
சாக்கடை அரசியலை சரித்திர அரசியலாய் மாற்றியவர்...
கைகளில் அழுக்குபடாத ஒரேயொரு அரசியல்வாதி...
அவர் தான் அர்துகான்...
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/06/blog-post.html"
இவரின் சாதனைகளை பட்டியலிடுவது மிகவும் சிரமம்....
ஏனெனில் அவரின் சாதனைகள் எண்ணிலடங்காதவை...
யாராலும் கற்பனை செய்து கூடு பார்க்க முடியாதவை...
சாக்கடை அரசியலை சரித்திர அரசியலாய் மாற்றியவர்...
கைகளில் அழுக்குபடாத ஒரேயொரு அரசியல்வாதி...
அவர் தான் அர்துகான்...
Monday, May 30, 2011
தண்டனை (வானொலி நாடகம்)
மௌனத்தின் புன்னகை என்ற நிகழ்ச்சித் தொடரில் இடம் பெற்ற மற்றொரு நாடகம் இது. இந் நாடகத்தின் தலைப்பு - தண்டனை.
சகோதரர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் வலைப்பூவிலிருந்து அவரின் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது. http://ashroffshihabdeen.blogspot.com/2011/05/blog-post_640.html?spref=fb
சகோதரர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் வலைப்பூவிலிருந்து அவரின் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது. http://ashroffshihabdeen.blogspot.com/2011/05/blog-post_640.html?spref=fb
தண்டனை (வானொலி நாடகம்) - 1
தண்டனை (வானொலி நாடகம்) - 2
தண்டனை (வானொலி நாடகம்) - 3
Saturday, May 21, 2011
இதுக்கு பெயர்தான் சினிமா
இயல்பான வாழ்க்கையை மிகவும் அற்புதமாக சினிமா வடிவத்தில் வழங்குவதில் ஈரானிய சினிமாவுக்கு இணை அவர்கள்மட்டுமே தான். போலியான, மனித வாழ்வில் சாத்தியமே இல்லாத கதைகளை சினிமா திரைக்கதைகளாக உருவாக்கி பார்வையாளர்களை மனநோயாளிகளாகவும், கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் இன்றைய சினிமா மாற்றிக் கொண்டிருக்கிறது. சினிமா என்றாலே பலர் அதனை விரசம்,காமம்,போலிக்காதல்,போலி என்றே பலர் கருதுகின்றனர். ஆனால் ஈரானிய சினிமாக்களோ மக்களின் இயல்பு வாழ்க்கையை சினமாவாக மாற்றி மனிதர்களின் உணர்வுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இயல்பு வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இவ்வளவு அழகான திரைக்கதைகளை அமைக்க முடியுமா என்று எம்மை இத்திரைப்படங்கள் வியக்க வைக்கின்றன. அப்படியான இயல்பு வாழ்க்கையை அற்புதமாக படம்பிடித்துக் காட்டும் ஒரு திரைப்படத்தைப் பற்றி நாம் இங்கு பார்க்க போகிறோம்.
நான் மேற்கூறப்பட்டவாறான திரைப்படங்களில் ஒன்று தான் THE SONG OF SPARROW. மிகவும் அற்புதமான கதைக் கருவை கொண்ட அழகான திரைப்படம். திரைப்பட துறையில் பல சாதனைகள் செய்த ஈரானிய இயக்குனர் மாஜித் மஜீதியின் கைவண்ணத்திலான திரைப்படமே இது ஈரான் என்றாலே அணுஆயுதமும் பாலைவனமும் தான் பலரின் மனதில் தோன்றும் ஆனால் நீங்கள் இந்த திரைப்படத்தை பார்த்தால் இதில் காட்டப்படும் அழகிய கிராமம் தான் உங்களுக்குள் தோன்றும் அவ்வளவு அழகாக இயக்குனர் ஈரானின் ஒரு கிராமத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
கரீம் ஒரு எளிய குடும்பத்தின் தலைவன். அவன் வேலைப்பார்ப்பது கோழிகளை (நாரைகளை) பாரமரிக்கும் ஒரு பண்ணையில். அவனின் குடும்பம் மிகவும் சிரியது மனைவி,இரண்டு மகள், ஒரு மகன். மூத்தமகள் ஹனீயாவுக்கு காது சரியாக கேட்பதில்லை ஒரு கருவியின் உதவியுடனேயே அடுத்தவர்கள் பேசுவதை கேட்பவளாக இருக்கிறாள். இவரின் மகன் ஹஸனுக்கு மீன்கள் என்றால் கொள்ளை பிரியம். அவளுக்கு அடுத்த மாதம் பாடசாலை இறுதிப் பரீட்சை. ஹஸன் தன் சகோதரி ஹனீயாவுடன் ஒரு தண்ணீர் தேங்கும் ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவளின் கேட்கும் இயந்திரம் தண்ணீரில் விழுந்து தொலைந்துவிடுகிறது. ஆனாலும் ஒருவாராக தந்தையின் உதவியுடன் அந்த இயந்திரத்தை தண்ணீர்லிருந்து தேடி எடுக்கிறார்கள். அந்தக் காட்சியை என்னால் முடிந்தவரை தமிழில் மொழிபெயர்துள்ளேன். இதோ அந்தக் காட்சி உங்கள் பார்வைக்காக...
கரீம் தன் நிறுவனத்தில் போய் தனது நிலையை கூறி கடன் கேட்கிறான். அவர்களும் நாளை பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள். அடுத்த நாள் பண்ணையை இவர் கண்காணிக்கும் போது ஒரு கோழி பண்ணையைவிட்டு தப்பியோடுகிறது. பல முறையில் அதனை பிடிக்க கரீம் முயற்சி செய்கிறார். அவர் அதனை பிடிப்பதற்கு எடுக்கும் முயற்சியையும் மிகவும் அற்புதமாக இயக்குனர் படக்காட்சியாக அமைத்துள்ளார். மேற்கூறிய அவ்வற்புதமான காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
என்ன முயற்சி செய்தபோதும் அவரின் முயற்சி பயனளிக்கவில்லை. அடுத்த நாள் கரீம்க்கு ஒரு அதிர்ச்சியான செய்தி அது தான் கரீம் வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தி. கரீம் மகளுக்கு எப்படி கேட்கும் கருவியை எடுத்துக் கொடுப்பேன் என்ற யோசனையுடன் வீட்டுக் செல்கிறார். குறைந்த செலவில் அக்கருவியை திருத்த முடியுமா என்று அவர் பலரிடம் அதனை காட்டிப் பார்க்கிறார். அதில் ஒருவர் கூறுகிறார் ஒரு வேளை தலைநகர் தெஹ்ரானில் இதனை திருத்தி கொள்ளலாம் எனக் கூறுகிறார். கரீம் அடுத்த நாள் காலையிலேயே தனது பழைய மோட்டார் சைக்கிளில் தெஹ்ரானுக்கு செல்கிறார். அங்கிருப்பவர்களும் கையைவிரிக்கிறார்கள். இந்தக் கருவி முழுமையாக பழுதடைந்துவிட்டது நீங்கள் புதிய கருவி ஒன்று வாங்குவதே சிறந்தது என்கிறார்கள். தொழிலையும் இழந்த கரீம் எப்படி இவ்வளவு விலை கூடிய ஒரு பொருளை வாங்குவேன் என்ற எண்ணத்துடன் அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார்.
என்ன முயற்சி செய்தபோதும் அவரின் முயற்சி பயனளிக்கவில்லை. அடுத்த நாள் கரீம்க்கு ஒரு அதிர்ச்சியான செய்தி அது தான் கரீம் வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தி. கரீம் மகளுக்கு எப்படி கேட்கும் கருவியை எடுத்துக் கொடுப்பேன் என்ற யோசனையுடன் வீட்டுக் செல்கிறார். குறைந்த செலவில் அக்கருவியை திருத்த முடியுமா என்று அவர் பலரிடம் அதனை காட்டிப் பார்க்கிறார். அதில் ஒருவர் கூறுகிறார் ஒரு வேளை தலைநகர் தெஹ்ரானில் இதனை திருத்தி கொள்ளலாம் எனக் கூறுகிறார். கரீம் அடுத்த நாள் காலையிலேயே தனது பழைய மோட்டார் சைக்கிளில் தெஹ்ரானுக்கு செல்கிறார். அங்கிருப்பவர்களும் கையைவிரிக்கிறார்கள். இந்தக் கருவி முழுமையாக பழுதடைந்துவிட்டது நீங்கள் புதிய கருவி ஒன்று வாங்குவதே சிறந்தது என்கிறார்கள். தொழிலையும் இழந்த கரீம் எப்படி இவ்வளவு விலை கூடிய ஒரு பொருளை வாங்குவேன் என்ற எண்ணத்துடன் அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார்.
அங்குதான் கரீம்க்கு அதிஷ்டம் வேலை செய்கிறது. கரீம் தனது மோட்டார் சைக்கிளில் ஏறும் போது கரீம் டாக்ஸி தொழில் செய்பவன் என்று நினைத்து அவனை சவாரிக்கு அழைக்கிறார். அந்தச்சவாரியின் மூலம் கரீம்க்கு நல்ல வருமானமும் கிடைத்தது. அதை தொடர்ச்சியாக தொழிலாக கரீம் செய்ய ஆரம்பிக்கிறான். ஓவ்வொரு நாளும் கரீம் வீடு செல்லும் போதும் பழைய கட்டிடப் பொருட்கள் வீசும் ஒரு இடத்திலிருந்து பழைய பொருட்களையும் வீட்டுக்கு கொண்டு சென்று சேர்த்து வந்தான். அதில் ஒரு முக்கியமாக ஒரு கதவை பத்திரமாக அவன் கொண்டு போய் அவனின் வீட்டுக்கு பொறுத்த வைத்திருந்தான். அந்தக் கதவை கரீமின் மனைவி அயல் வீட்டுக்கு கொடுத்துவிட்டாள் இதனை கேள்விப்பட்ட கரீம் கடும் கோபத்துடன் அயல் வீட்டுக்கு சென்று கதவை எடுத்து வருகிறான். இதை பார்த்த மனைவி இரவில் மிகவும் மனவருத்தத்துடன் அழுகிறாள். மனைவி அழுவதை பார்த்த கரீம்க்கு மிகவும் மனக்கஷ்டமாக இருந்தது ஆனாலும் கரீம் தனது மனைவியை ஒருவாராக சமாதானப்படுத்துகிறார். இந்த இரண்டு காட்சியையும் இயக்குனர் மிகவும் அற்புதமாக இயல்பு குன்றாமல் அமைத்திருக்கிறார். அந்தக் காட்சியும் இதோ உங்கள் பார்வைக்கு...
இப்படியே சில காலம் செல்கிறது. ஒரு விடுமுறை நாள் கரீம் தான் சேர்த்து வைத்திருந்த பழைய பொருட்களை ஒழுங்குபடுத்தும் போது டமார் என அதனுள் விழுந்து கடுமையாக காயப்படுகிறான். கரீம்க்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அவனின் மகன் தனது மாமாவுடன் சேர்ந்து கூலி தொழில் செய்ய ஆரம்பிக்கிறான். அந்தக் காட்சி....
ஒரு கட்டத்தில் வேளை செய்து கலைப்படைந்த மகன் உறங்கும் போது அவனின் வேளையின் காரணமாக கைகளில் ஏற்பட்டுள்ள தழும்புகளை பார்த்து மிகவும் கவலைப்படுகிறான்.
தனது தந்தை உடலால் காயமடைந்திருக்கும் நேரத்தில் தனது தந்தையின் உள்ளம் காயமடையக் கூடாதே என்பதற்காக தனக்கு நன்றாக காது கேட்கிறது போல் மூத்தமகள் நடிக்கப் போய் தந்தையிடம் மாட்டிக் கொள்ளும் காட்சி மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது.
கரீமின் மகனுக்கு மீன்கள் என்றால் கொள்ளை ஆசை அதற்காக பூக்கள் விற்று பணம் சேர்ப்பதற்காக சென்றபோது தன் தந்தையிடம் அகப்பட்டுக் கொள்ளும் காட்சியும் நன்றான அமைந்துள்ளது.
கரீமின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு பணம் கொடுத்து வாங்கிய மீன்கள் தரையில் விழும் காட்சி மகிவும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தனது உணர்வை வெளிப்படுத்தும் விதம் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. மீனை இழந்து கவலையில் ஆழ்ந்திருக்கும் அந்த பிள்ளைகளை அவர் ஆறுதல்படுத்தும் விதம் மனதில் அப்படியே பதிந்து நிற்கிறது.
இன்னும் குடும்பங்களில் இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளையும் அதில் இருக்கும் அளவில முடியா மகிழ்ச்சியையும் எங்களுக்கும் உணர வைக்கிறார் இயக்குனர்.
இந்த படம் எளிமையான வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களையும் அதைவிட அதில் இருக்கும் அளவிட முடியா மகிழ்ச்சியையும் அழகாக எடுத்துக் காட்டுகிறார். அது மட்டுமல்ல எளிமையான வாழ்க்கையில் இத்தனை இன்பங்களா என்று கூட எங்களை சிந்திக்க வைக்கிறது. இந்த அருமையான திரைடப்படம். கடைசி வரை இப்படம் எங்கள் உணர்ச்சியுடன் பேசுகிறது என்றே சொல்லாம்.
இத்திரைப்படத்தின் பின்னணி இசை அதை கேட்டுப்பார்த்தால் உங்களுக்கு புரியும். இன்று சமூகத்துக்கு இப்படியான திரைப்படங்கள் தான் தேவை போலியான காட்போட் வீரர்களும் கற்பனை உலகில் மனிதனை வாழவைக்கும் சினிமாவை விட இந்த சினிமா மிவும் அருமையென்றே கூற வேண்டும்.
முடிந்தவர்கள் இந்தப்படத்தை முழுமையாக பாருங்கள் ஒரு வித்தியாசமான ஒரு திரைப்படத்தைமட்டுமல்ல ஒரு வித்தியாசமான வாழ்க்கை முறையை பார்த்த அனுபவமும் உங்களுக்கு கிடைக்கும. இங்கு சொல்லப்பட்டவை அந்திரைப்படத்தில் 10 வீதம் தான்.
இது சம்பந்தமாக உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறோம்.
Thursday, May 12, 2011
வீரம் மிக்க நாளைய சமூகத்தை உருவாக்க......
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு நாள் நபியவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன் அப்போது நபியவர்கள் சிறுவனே நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு கூறினார்கள். அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை காண்பாய். நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வை கொண்டே உதவி தேடு. அறிந்து கொள் முழு சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறுதான் முழு சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது. எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. புத்தகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதழ்கள் காய்ந்துவிட்டன.
இந்த ஹதீஸை சற்று நன்கு கவனித்துப் பாருங்கள் இஸ்லாமிய உளவியலாலளர்கள் இந்த ஹதீஸை பற்றி குறிப்பிடும் போது இந்த ஹதீஸை நிச்சயம் ஒவ்வொரு இஸ்லாமிய சிறுவனின் மனதிலும் பதிக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமல்ல இங்கே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு கற்பித்தல் நுணுக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அதாவது இந்த ஹதீஸில் முதல் வார்த்தைகளை சற்று கவனியுங்கள். 'சிறுவனே நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத்தருகிறேன்'; என்று கூறுவதன் மூலம் நபியவர்கள் அந்த சிறுவனை விழித்துப் பேசுகிறார்கள். தொடர்ந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
'அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வை நீ பேணிக்கொள் (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை காண்பாய்' இங்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை செய்யும் படி கூறுகிறார்கள். அதனை இரு முறை கூறுவதன் மூலம் அதன் முக்கியத்துவத்தையும் அச்சிறுவனுக்கு உணர்த்துகிறார்கள். அது மட்டுமல்ல அதன் பிரதிபலனையும் கூறுகிறார்கள். சில இஸ்லாமிய உளவியலாளர்கள் இதனை விளக்கும் போது சிறுவர்களுக்கு ஒரு வேலையை செய்யும்படி ஏவினால் அதற்கு அவர்கள் ஏதாவது பிரதிபலனை எதிர்பார்ப்பது இயல்பு. அதனாலேயே நபியவர்கள் இப்படி கட்டளையையும் கூறி பிரதிபலனையும் கூறினார்கள் என்று கூறுகிறார்கள். மேலும் அந்த ஹதீஸிலே 'நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடினால் அல்லாஹ்வை கொண்டே உதவி தேடு' என்னும் வசனங்கள் வருகின்றன இவ்வசனங்கள் மூலம் எந்த தேவையின் போதும் பிரச்சினையின் போதும் அல்லாஹ்விடமே நாம் உதவி தேட வேண்டும் என்பதை நபியவர்கள் அச்சிறுவனுக்கு உணர்த்துகிறார்கள். மேலும் தொடர்ந்து வரும் வசனங்கள் மிகவும் முக்கியமானவை அவையாவன 'அறிந்து கொள் முழு சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினால் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறுதான் முழு சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது. எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. புத்தகங்கள் மூடப்பட்டுவிட்டன.'
இஸ்லாமிய உளவியலாளர்கள் இந்த வசனத்தின் முக்கியத்துவத்தை கூறும் போது இந்த வசனங்கள் நிச்சயம் சிறுவர்களின் மனதி;ல் பதிக்கப்படவேண்டும். அப்படி பதிக்கப்பட்டால் அச்சிறுவன் எதற்கும் அஞ்சமாட்டான் தயங்கமாட்டான் உண்மையில் இது நபியவர்களின் காலத்து குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது ஆகவே தான் பெரிய யுத்தங்களில் சிறு வயது ஸஹாபாக்கள் கலந்து கொண்டார்கள். பத்ர் யுத்தத்தில் காபிர்களின் தளபதியை வீழத்தியதும் 10 வயது இரு சிறுவர்கள் தான். உண்மையில் இவர்களி;ன் துணிச்சலுக்கு அடிப்படை காரணம் இந்த ஹதீஸின் அடிப்படை கருத்துக்கள் அவர்களின் மனதில் ஆழமாக பதியப்பட்டிருப்பதுதான் என்று கூற முடியும்.
இந்த வசனங்களை நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு கூற காரணம் சிறுவர்களின் மனதில்
இந்த அடிப்படை நம்பிக்கைகள் பதியப்பட்டால் அவை வாழ் நாள் முழுதும் அவனில் பாதிப்பை ஏற்படுத்தும். எந்த துன்பம் கஷ்டம் வந்த போதும் அவன் விரக்தியடையமாட்டான். யார் அவனை அச்சுறுத்திய போதும் அவன் யாருக்கும் அஞ்ச மாட்டான். அவன் வீரமிக்கவனாக இருப்பான். அல்லாஹ்விடம் மட்டுமே அவன் உதவி தேடுவான். கத்ர் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை அவன் மனதில் ஏற்படும்.
இன்று எங்கள் நாட்டை எடுத்துக் கொண்டால் பாடசாலை பருவ மாணவர்களிடையே தற்கொலை, விரக்தி, மன அழுத்தம், மனநோய்கள் போன்றன பெருகிக் கொண்டு வருகின்றன. உண்மையிலே இவற்றுக்கான சிறந்த தீர்வாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. இந்த கருத்து சிறுவர்களின் மனதில் பதியப்படுவதானது அவர்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வாகும் என்பது இஸ்லாமிய உளவியலாளர்களின் கருத்து.
உண்மையில் சிறுவர் மத்ரஸாக்களில் முஸ்லிம் பாடசாலைகளில் அஹதியாக்களில் இவ்வாறான ஹதீஸ்களை நாம் உரிய முறையில் கற்றுக் கொடுப்பதன் மூலம் எமது குழந்தைகளை வீரமிக்க அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட குழந்தைகளாக நம்மால் உருவாக்கலாம்.
Saturday, May 7, 2011
குரங்கு செய்த உதவி
நம் சமூகத்தில் பலர் தூய உள்ளம் படைத்தவர்கள். அவர்களின் எண்ணம் சமூகத்துக்கு நன்மை செய்வது ஆனால் அவர்கள் செய்யும் உதவி கடைசியில் உபத்திரமாக வந்து முடியும். ஏனெனில் அவர்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள். எதற்கும் தூய உள்ளமும் உத்வேகமும் மட்டும் போதாது. submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/05/blog-post.html"
Saturday, April 16, 2011
பயிற்சி ...பயிற்சி ..... (VDO)
என்னால் முடியும்.... என்னால் முடியும் என்று கூறிக் கொண்டிருப்பதில் எந்த பயனுமில்லை....
அதற்கான முயற்சியும் பயிற்சியுமில்லாவிட்டால். submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/04/vdo.html"
Thursday, April 7, 2011
குர்ஆனில் அற்புதம் (Pulses Star)
குர்ஆன் பல அற்புதமான பெரிய விஞ்ஞான உண்மைகளை கூறியுள்ளது. எல்லோருக்கும் எழும் கேள்வி இவ்வளவு பெரிய விஞ்ஞான உண்மைகளை 1500 வருடங்களுக்கு முன் எழுத வாசிக்க தெரியா ஒருவரால் எப்படி சொல்லியிருக்க முடியும்.
வானத்தின் மீதும் ஒலி எழுப்பும் நட்சத்திரத்தின் மீதும் சத்தியமாக (86-1)
ஒலி எழுப்பும் நட்சத்திரம் என உம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா? (86-2)
அதுவே ஊடறுக்கும் நட்சத்திரமாகும் (86-3) submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/04/pulses-star.html"
Saturday, March 19, 2011
கணிதத்தில் புலிகள் (Abacus)
ஓமான் பாடசாலையொன்றில் மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கணிதக் கேள்விகளுக்கு நொடிப் பொழுதில் பதில் சொல்லும் விதம்.
முயற்சி செய்து பாருங்கள் உங்களாலும் முடியும். submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/03/abacus.html"
Thursday, March 10, 2011
புலிகள் முஸ்லிம்களை இழைத்த கொடுமைகள்
புலிகளின் அத்துமீறல்கள் முஸ்லிம்கள் மீதான
ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர்.
அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும்.
கர்ப்பினிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திய கொன்ற சம்பவம் இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை விரித்துக் கொண்டே போகலாம். அது சம்பந்தமான சிறு ஆவணமே இது.
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/03/blog-post.html"
ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர்.
அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும்.
கர்ப்பினிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திய கொன்ற சம்பவம் இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை விரித்துக் கொண்டே போகலாம். அது சம்பந்தமான சிறு ஆவணமே இது.
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/03/blog-post.html"
Wednesday, March 9, 2011
2030 இல் இலங்கை முஸ்லிம்கள் (Digital Short Story)
இன்று நாம் வருடத்துக்கு உம்ராவுக்கு மட்டும் 4 கோடிக்கு மேலால் செலவழிக்கிறோம்.
உம்ரா ஒரு சுன்னத்தான வணக்கம்.
அதே நேரம் எம்மில் பலர் வாழ வழியில்லாமல் படிக்க வழியில்லாமல் வாழ்கின்றனர்.
உம்ரா செய்தால் உங்களுக்குமட்டும் தான் நன்மை படிக்க வழியில்லாதவன் வாழ வழியில்லாதவனுக்கு செலவழித்தால் முழு உம்மத்துக்கும் நன்மை. குறைந்தது பணத்தை காட்டி மக்களை ஏமாற்றும் ஷிஆ வாக சரி மாறாமல் இருப்பான். submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/03/2030-digital-short-story.html"
உம்ரா ஒரு சுன்னத்தான வணக்கம்.
அதே நேரம் எம்மில் பலர் வாழ வழியில்லாமல் படிக்க வழியில்லாமல் வாழ்கின்றனர்.
உம்ரா செய்தால் உங்களுக்குமட்டும் தான் நன்மை படிக்க வழியில்லாதவன் வாழ வழியில்லாதவனுக்கு செலவழித்தால் முழு உம்மத்துக்கும் நன்மை. குறைந்தது பணத்தை காட்டி மக்களை ஏமாற்றும் ஷிஆ வாக சரி மாறாமல் இருப்பான். submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/03/2030-digital-short-story.html"
Sunday, February 6, 2011
Wednesday, February 2, 2011
வெடித்து சிதறும் வானம் With Audio Voice
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/02/with-audio-voice.html"
Saturday, January 29, 2011
End Of Mubarak (EGYPT)
‘‘காட்டுக்குள் நுழைகின்ற காற்று
என்றும்
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து
விட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை’’
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/end-of-mubarak-egypt.html"
என்றும்
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து
விட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை’’
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/end-of-mubarak-egypt.html"
Danger But (Funny)
Summer at Willow Lake submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/danger-but-funny.html"
Monday, January 24, 2011
வளர்ந்து செல்லும் வானம் (குர்ஆன்)
நான் சாகா வரம் பெற்றவன்
காலங்கள் மாறலாம்
சமூகங்கள் மாறலாம்
...
பிரச்சினைகள் மாறலாம்
ஆனால் என்னில்
ஒரு அட்சரமேனும் மாறப் போவதில்லை....
Tuesday, January 18, 2011
Do you shy to pray.-Tamil (தமிழ்)
Monday, January 17, 2011
Dream with me-Tamil-வாருங்கள் கனவு காண்போம் (melody song)
ஒரு வித்தியாசமான மெல்லிசை பாடல்...
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/dream-with-me-tamil-melody-song.html"
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/dream-with-me-tamil-melody-song.html"
Saturday, January 15, 2011
Quran Tharjuma With Nature Scence Tamil Voice
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/quran-tharjuma-with-nature-scence-tamil.html"
Saturday, January 8, 2011
Black Hole Star (கரும்புள்ளி நட்சத்திரம்) Quran....
குர்ஆனை நீங்கள் மற்றவருக்கு சொல்லு முன் நீங்கள் கொஞ்சம் விளங்கினால் தானே சிறந்தது...
நாங்களே குர்ஆனை விளங்க ஆயத்தமில்லயா பின்னர் எப்படி முஸ்லிமல்லாதவர்கள் விளங்க ஆயத்தமாவார்கள்...The Adventures of Sherlock Holmes submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/black-hole-star-quran.html"
Thursday, January 6, 2011
நடமாடும் இரவு (குர்ஆன்) spend 1 minit for Understand Universe
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/spend-1-minit-for-understand-universe.html"
Saturday, January 1, 2011
AZAN SOLLUZU......... SLBC
SLBC MUST THINK ABOUT THIS
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/azan-solluzu-slbc.html"
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/azan-solluzu-slbc.html"
Rauf's Umra (Label Muslims) christian shia Education
What is the Most Important......... UMRA or Education
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/raufs-umra-label-muslims-christian-shia.html"
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/01/raufs-umra-label-muslims-christian-shia.html"
Subscribe to:
Posts (Atom)